கம்பீர் எல்லாருக்கும் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கார்.. ஆசிய கப்புக்கு அத ஆரம்பிச்சிட்டோம் – ஷிவம் துபே பேட்டி

0
33
Dube

இந்திய அணி தற்போது துபாயில் ஆசியக் கோப்பை டி20 தொடருக்கு பயிற்சியை ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் முதல் பயிற்சி அமர்வு குறித்து இந்திய வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய அணி தனது பிரிவில் இடம் பெற்று இருக்கும் யுஏஇ, பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. மேலும் இந்த பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் என்பதால், இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக மோதும் வாய்ப்புகளும் அதிகம்.

- Advertisement -

கம்பீர் தந்த மெசேஜ்

இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்தியாவுக்கு அடுத்தபடியான பெரிய அணிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ், யுஏஇ என ஐந்து நாடுகள் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி நேரடியாக துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முதல் பயிற்சி அமர்வில் பங்கேற்ற சிவம் துபே பேசும்பொழுது “நாங்கள் மீண்டும் வந்து விட்டோம். பயிற்சியாளர் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அவர் எங்களிடம் நீங்கள் நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது செய்வதற்கு உங்களுக்கு விஷயங்கள் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார். இந்த உற்சாகத்துடன் நாங்கள் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

கில் சூரியகுமார் கருத்து

இது குறித்து துணை கேப்டன் கில் கூறும் பொழுது ” இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நான் ஒரு சிறந்த அணுவுடன் தற்போது இருக்கிறேன். இந்த காலகட்டத்தில் நாங்கள் டி20 கிரிக்கெட் விளையாடும் முறை மிகவும் பொழுதுபோக்கானது. அனைவரையும் மகிழ்ச்சி படுத்தும் முறையில் விளையாடுகிறோம் ” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : துலீப் கோப்பை.. ருதுராஜ் சதம் வீண் ஆகிவிட்டதா? ஆர்சிபி கேப்டன் அணி அபார ஆட்டம்

கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” நம்ப முடியாத திறமைகளை கொண்ட ஒரு அற்புதமான அணியை சுற்றி இருக்கும் பொழுது அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. என்னுடைய வீரர்களை மைதானத்தில் பார்க்கும் பொழுது எப்பொழுதும் என்னிடம் ஒரு புன்னகை இருக்கும். காரணம் அவர்கள் தங்கள் தயார் ஆவதற்காக தங்கள் உடம்பை லைனில் வைக்கும் விதம் அற்புதமாக இருக்கும். அவர்கள் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்து செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -