அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை அனைத்து ஐபிஎல் அணிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி கடந்த இரண்டு சீசன்களிலும் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத மயங்க் யாதவை மீண்டும் தக்க வைத்துக் கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் மயாங்க் யாதவ் இது குறித்து சில முக்கிய கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மயாங்க் யாதவ் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி தனது அதிவேகப் பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணரடித்ததோடு போட்டிகளை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் அதற்குப் பிறகு காயம் காரணமாக வெளியேறிய அவர், அந்த முழு சீசனும் விளையாடவில்லை. அதற்குப் பின்னர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டாலும் கடந்த ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் அதற்குப் பிறகும் காயம் காரணமாக வெளியேறினார்.
மேலும் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் சில போட்டிகளில் விளையாடினாரே தவிர அதற்குப் பிறகு பெரிதாக எங்கும் விளையாடவில்லை. இந்த சூழ்நிலையில் லக்னோ அணி திரும்பவும் இவரை தக்க வைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கும் மயாங்க் யாதவ் அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை வெகுவாக பாராட்டி பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “கடந்த இரண்டு முதல் மூன்று சீசன்களில் காயம் காரணமாக எனக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பின்னடைவுகளையும் மீறி லக்னோ அணி எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. லக்னோ அணியின் உரிமையாளர் மைதானத்திற்கு வெளியிலும் உள்ளேயும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். டாக்டர் சஞ்சீவ் கோயங்கா எனக்கு எப்போது தேவைப்பட்டாலும் அல்லது என்ன தேவைப்பட்டாலும் அவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறார்” என்று பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:கில் ஐபிஎல் ஆடக்கூடாது.. இதுதான் கம்பீர் விருப்பம்.. அவரே என்கிட்ட சொன்னார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
தற்போது இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கேஎல் ராகுல் அணியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தற்போது மயாங்க் உரிமையாளரை பாராட்டி பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.






