சிஎஸ்கேல எனக்கு தோனிதான் துணை.. ஆனா அங்க என் முக்கிய வேலை இதுதான் – ஜாகிர் கான் பேட்டி

0
0

​ஐபிஎல் 2027 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஹெட் கோச்சாக பொறுப்பேற்றுள்ள இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான், எம்எஸ் தோனியின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

​ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் எட்டாவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்த நிலையில், ஸ்டீபன் பிளெமிங்கிற்கு பதிலாக ஜாகீர் கானை புதிய ஹெட் கோச்சாக நியமித்து ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது.

- Advertisement -

​டி20 கிரிக்கெட் அதிவேகமாக மாறிவரும் சூழலில், வரவிருக்கும் மினி ஏலத்தை சந்திக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு ஜாகீர் கானின் வருகை டிரெஸ்ஸிங் ரூமில் புதிய ஸ்டெபிலிட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​இதுகுறித்து ஜாகீர் கான் பேசும்போது “இது ஒரு செட்டில்ட் பிரான்சைஸ், பல ஆண்டுகளாக இங்கு பல விஷயங்கள் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதனால் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதல் மிகவும் க்ரூஷியல் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். டீம் மேனேஜ்மென்ட் விஷன் என்பதும் முக்கியமானது, இது ஒரு நியூ செட்டப் என்பதால் இதில் சில லேர்னிங்ஸ் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “டி20 போட்டிகளின் பிரஷர் மற்றும் புதிய டைனமிக்ஸ் புரிந்து கொள்வது அவசியம். கேம் வேகமாக எவால்வ் ஆகிறது, அதற்கு ஏற்ப நாம் முன்னேறி செல்ல வேண்டும். சிஎஸ்கே அணி இத்தனை ஆண்டுகள் சாதித்ததற்கு காரணம் சூழ்நிலைக்கு ஏற்ப அடாப்ட் செய்து கொண்டதுதான். மாறுபடும் காலத்திற்கு ஏற்ப மாறி குரூப் முழுவதும் ஃபெய்த் உருவாக்கி விஷயங்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -