இந்திய கிரிக்கெட் வீரர்களின் மகன்களான ஆர்யவீர் சேவாக், அன்வய் டிராவிட் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோரை அவர்களது தந்தையர்களுடன் கம்பேர் செய்வது சரியல்ல என்று இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் ஆதரவாக பேசி இருக்கிறார்.
இந்திய அண்டர் 19 கிரிக்கெட் டீமில் ஆர்யவீர் சேவாக் மற்றும் அன்வய் டிராவிட் விளையாடி வரும் நிலையில், சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
இவர்கள் மூவரும் தொடர்ந்து மீடியாக்களின் பிரஷர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எதிர்கொண்டு வருகிறார்கள்.
தற்போதைய சூழலில் முன்னாள் லெஜெண்ட்ஸ் வீரர்களின் மகன்கள் கிரிக்கெட்டிற்குள் நுழைவதால், அவர்களை தந்தையரின் சாதனைகளுடன் கம்பேர் செய்வது இயல்பாக மாறிவிட்டது. ஆனால் இத்தகைய ஒப்பீடுகள் இளம் வீரர்களின் கரியர் தொடக்கத்திலேயே தேவையற்ற பிரஷரை ஏற்படுத்துவதாக சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது “இப்படி கம்பேர் செய்யத்தான் செய்வார்கள். நாங்கள் கிரிக்கெட் விளையாடி சிறப்பாக செயல்பட்டோம், இப்போது எங்கள் பிள்ளைகள் விளையாடுகிறார்கள், அதனால் அவர்கள் கம்பேர் செய்வார்கள். ஆனால் தந்தையர்களுடன் கம்பேர் செய்வது சரியான விஷயம் அல்ல. அவர்களை மற்ற பிளேயர்களுடன் கம்பேர் செய்யலாம், ஆனால் ஏன் தந்தையுடன் கம்பேர் செய்கிறீர்கள்? அது சரியல்ல” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசுகையில் “மீடியாவோ அல்லது மக்களோ கம்பேர் செய்யும்போது அவர்கள் அப்செட் ஆவார்கள். ஆர்யவீருக்கு இப்போது 18 வயதுதான் ஆகிறது. நான் எனக்காகவும் எனது டீமிற்காகவும் நிறைய செய்துவிட்டேன், அவர் இப்போதுதான் கரியரை ஸ்டார்ட் செய்து இருக்கிறார். அதேபோல் அர்ஜுன் டெண்டுல்கரை சச்சினுடன் கம்பேர் செய்வதும் சரியல்ல. அவர் ஒரு ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டராக ரஞ்சி டிராபியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் தனக்கான நேம் உருவாக்கி விளையாடுவார், தந்தையின் ஃபூட்ஸ்டெப்ஸை ஃபாலோ செய்ய மாட்டார். முதலில் அவர்களை விளையாட விடுங்கள்” என்று கூறி இருக்கிறார்.






