இந்திய கிரிக்கெட்

விராட் கோலிக்கு வேதனையாக இருக்கும்னு எனக்கு தெரியும்.. பொறுப்பா இருக்க வேண்டிய அவர் அதை செய்யல – ஜாகிர் கான் வருத்தம்

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்திய அணியின் பக்கம் முடிக்காமல் போனதில் விராட் கோலி வேதனை அடைந்திருப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா உடன் இணைந்து விராட் கோலி 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அந்த நேரத்தில் கடைசி ஆறு ஓவர்களுக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. எனவே விராட் கோலி போட்டியை முடித்து விடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் ஹர்ஷித் ராணா ஆட்டம் இழந்ததும் போட்டி முழுக்க நியூசிலாந்து பக்கம் சென்று விட்டது. இறுதியில் இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொடரை இழந்தது.

விராட்டுக்கு வேதனை இருக்கும்

இதுகுறித்து ஜாகிர் கான் பேசும் பொழுது “ஒரு அடையாளம் பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் வரை நமக்கு நம்பிக்கை இருக்கும். நேற்றைய போட்டியில் அது விராட் கோலி ஆக இருந்தார். அவர் அந்த ஜோனுக்குள் வந்தால் என்ன செய்வார் என்பதெல்லாம் நமக்கு நன்றாக தெரியும். இலக்கை துரத்தி விளையாடி வெற்றி பெறுவது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பலம்”

“விராட் கோலி நம்பிக்கை உடன் விளையாடினார். அவருக்கு கொஞ்சம் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது. முதலில் அந்த ஆதரவை நிதிஷ்குமார் ரெட்டி கொடுத்தார். பிறகு ஹர்ஷித் ராணா கொடுத்தார். விராட் கோலி தனி வீரராக ஆட்டத்தை முடித்து விடும் நிலைக்கு வந்து விட்டார். ஆனால் அந்த நேரத்தில் முடிக்க முடியாமல் போனதில் அவர் நிச்சயம் வேதனை அடைந்திருப்பார்”

- Advertisement -

பொறுப்பு இவரிடம் இருந்தது

” மேலும் விராட் கோலி அடிக்க சென்ற பந்து சரியான இடத்தில்தான் இருந்தது. சில நேரங்களில் அடிக்க வேண்டிய இடத்தில் இருந்தால் கூட தவறி இப்படி ஆகிவிடும். நேற்று விராட் கோலிக்கும் அதுதான் நடந்தது. ஹர்ஷித் ராணா ஆட்டம் இழந்ததால் ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக் கொள்வது பெரிய சுமையாக விராட் கோலிக்கு மாறியதுதான் பிரச்சனையாகிவிட்டது”

இதையும் படிங்க : நியூசிலாந்து 8 வீரர்களோட தான் வந்துச்சு.. இது உங்களுக்கு வலிக்கனும்.. ப்ளீஸ் முழிச்சுக்கோங்க – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

“நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டம் இழந்ததும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பொறுப்பு இருந்தது. ஆனால் அதை அவர் செய்ய தவறிவிட்டார். இந்த நிலையில் ஹர்ஷித் ராணா அவருடைய இடத்திற்கு எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு சிறப்பாக விளையாடினார். அவரால்தான் போட்டி மாறியது. அதற்காக அவரை பாராட்ட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts