இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஷார்ட் பால் பலவீனத்துக்கு எதிராக எப்படி சிறந்த தீர்வை கண்டறிந்து இருக்கிறார்? என்பது குறித்து விளக்கி பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பந்துகளை அனாயசமாக சிக்ஸர்கள் அடித்து 30 பந்துகளில் அரை சதம் எடுத்து ஆட்டம் இழந்தார். 19 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் இவர் அதிரடியாக விளையாடிய விதம் இந்திய அணியின் பக்கம் போட்டியை எளிதாக திருப்பி விட்டது.
ஸ்ரேயாஸ் கண்டுபிடித்த தீர்வு
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பொதுவாக இந்த வகையான பந்துவீச்சில் பலவீனம் இருப்பதாக கருதப்பட்டது. மேலும் சில பல முறைகள் அந்த பந்தை விளையாடக்கூடிய சரியான முறையில் இல்லாமல் அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார். எனவே அவர் களம் இறங்கும் பொழுது பந்துவீச்சாளர்கள் இந்த திட்டத்தை கையில் எடுப்பார்கள். ஆனால் நேற்று ஸ்ரேயாஸ் ஐயர் ஆர்ச்சருக்கு எதிராக சிறப்பான முறையில் விளையாடியிருந்தார்.
இது குறித்து ஜாகிர் கான் பேசும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய பலவீனத்திற்கு ஒரு வழியை கண்டுபிடித்து விட்டார் என்று நான் நினைக்கிறேன். நேற்று அவர் உள்ளே வந்ததும் ஷார்ட் பந்தை மிகச் சிறப்பாக விளையாடினார். இந்த பந்துவீச்சில் அவருக்கு பலவீனம் உள்ளது என ஒரு கவலை இருந்தது. ஆனால் நேற்று அவர் விளையாடிய விதத்தில் எனக்கு பிடித்தது அப்படியான பந்துகளை விளையாட அவர் நகர்ந்து இடம் கொடுத்துக் கொள்ளவில்லை. அவர் பந்துகளை விளையாடுவதற்கு சரியான இடத்தில் நின்று விளையாடினார்”
ஸ்ரேயாஸ் தந்திருக்கும் மெசேஜ்
“இந்த வழிமுறை அவருக்கு பலன் தந்திருக்கிறது. இது அவருடைய நம்பிக்கையை அதிகரித்திருக்கும். இதன் மூலம் அவர் வந்து வீச்சாளர்களுக்கு அனுப்பி இருக்கும் செய்தி என்னவென்றால், நீங்கள் இந்த திட்டத்துடன் என்னிடம் வருவீர்கள் என்றால் நான் உங்களிடம் திரும்பி வருவேன் என்று கூறியிருக்கிறார். இது முக்கியமான ஒரு செய்தியாகும். ஏனென்றால் இனி பந்துவீச்சாளர்கள் அவரை பார்க்கும் முறை மாறும்”
இதையும் படிங்க : ரோகித் வினோத சிக்கலில் மாட்டிக்கிட்டார்.. இத செய்யலனா அவரோட கிரிக்கெட் காலம் முடிஞ்சிடும் – மஞ்ச்ரேக்கர் கருத்து
“அவர் செய்த கவுண்டர் அட்டாக் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. அது ஒரு அற்புதமான இன்னிங்ஸ். அந்த நேரத்தில் பந்து புதியதாகவும், கடினமானதாகவும், மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளும் விழுந்து இருந்தது. இப்படியான சூழ்நிலையில் அவர் நம்பிக்கையுடன் அதிரடியாக இன்னிங்சை எடுத்துச் சென்றது நன்றாக வேலை செய்தது. இது ரன் சேசிங் செய்வதற்கான நல்ல தொனியை அமைத்துக் கொடுத்தது” என்று கூறி இருக்கிறார்.






