ரோகித் வினோத சிக்கலில் மாட்டிக்கிட்டார்.. இத செய்யலனா அவரோட கிரிக்கெட் காலம் முடிஞ்சிடும் – மஞ்ச்ரேக்கர் கருத்து

0
205
Rohit

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மோசமான முறையில் ஆட்டம் இழந்த கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்ம் பற்றி இந்திய முன்னால் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மொத்தம் ஏழு பந்துகளை சந்தித்து மெதுவான பந்தை கணிக்க முடியாமல் தவறான முறையில் விளையாடிய ஆட்டம் இழந்தார். அவர் கடைசி பத்து சர்வதேச இன்னிங்ஸ்களில் மொத்தம் ஏழு முறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். அடுத்து சாம்பியன்ஸ் டிராபி இருப்பதால் இன்னும் சிக்கலாக மாறியிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனையாக மாறிய கேப்டன்

தற்பொழுது ரோகித் சர்மா இந்திய ஒரு நாள் அணியில் இல்லையென்றால் சிறந்த ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் இயல்பாக இந்திய பிளேயிங் லெவலில் இடம் பிடிக்க முடியும். நேற்று விராட் கோலி விளையாடாத காரணத்தினால் அவர் இடம் பெற்றார். மேலும் நேற்றைய போட்டியில் விராட் கோலி விளையாடி இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கிவிட்டு ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் நினைத்திருந்ததாக கூறப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அணியில் சிறப்பாக விளையாடக்கூடிய யாராவது ஒருவர் கேப்டன் ரோஹித் சர்மாவுக்காக தன்னுடைய இடத்தை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அவருடைய பேட்டிங் ஃபார்ம் ஒட்டுமொத்தமாக தற்பொழுது பேட்டிங் யூனிட்டில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.

- Advertisement -

ரோஹித்துக்கு இருப்பது பிரச்சனை

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “ரோஹித் சர்மா ஆட்டமிழந்த முறையில் அவர் நிச்சயம் ஏமாற்றம் அடைந்து இருப்பார். அவர் அழுத்தத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவான முறையில் தெரிகிறது. அவர் 50 ஓவர் கிரிக்கெட்டில் ரன்கள் எடுக்க தடுமாறினால் ஒரு விஷயத்தை நாம் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதாவது அவர் பிரச்சனையில் இருக்கிறார் என்பதை மிக எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்”

இதையும் படிங்க : 19/2.. ரோகித் இந்த ஒரு முக்கிய விஷயத்தை சொல்லி இருக்கார்.. ஆனா நான் வேற மாதிரி செய்வேன் – கில் பேட்டி

“ஏனென்றால் பார்மில் இல்லாத எந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவம்தான் மிகவும் சிறந்த வடிவம். ரோஹித் சர்மா தற்பொழுது இருக்கும் ஒருநாள் போட்டிகளை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் பேட்டிங் பார்முக்கு திரும்பாவிட்டால், அவருக்கு இந்த ஈஸியான போட்டிகள் கிடைக்காது. பின்பு அவர் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -