இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் விராட் கோலியை வைத்துக்கொண்டு மிகச்சிறப்பான முறையில் சம்பவம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் மீண்டும் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்த முறையும் ஜெய்ஸ்வால் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை வீணடித்தார். ரோகித் சர்மா 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
புத்திசாலித்தனமான பேட்டிங்
இதைத்தொடர்ந்து ருதுராஜ் உள்ளே வந்ததும் மார்க்கோ யான்சன் அபாயகரமான பவுன்சர் ஒன்றை வீசினார். முதல் பந்திலேயே ஆட்டம் இழக்கும் ஆபத்தில் இருந்து தப்பிய ருதுராஜ் மெல்ல மெல்ல தன்னுடைய இயல்பான ஆட்டத்திற்கு திரும்பினார். ஆரம்பத்திலேயே அவருக்கு சில பவுண்டரிகள் கிடைத்தன.
இதன் காரணமாக அவரால் தன்னுடைய இன்னிங்சை பொறுமையாக எடுத்துச் செல்ல முடிந்தது. அதே சமயத்தில் விராட் கோலி உடன் இணைந்து அவரே பாராட்டும் அளவுக்கு ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன் எடுத்து, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை செட்டில் ஆக விடாமல் செய்தார்.
ருதுராஜ் சிறப்பான சம்பவம்
இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். இதனால் அவர் மீது இருந்த அழுத்தம் குறைந்தது. மேலும் ஒரு நல்ல துவக்கம் அணிக்கு அமைந்திருந்தது. இதன் காரணமாக இருவரில் ஒருவர் அதிரடியாக ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது. இந்த நிலையில் விராட் கோலியை நிற்க வைத்து விட்டு ருதுராஜ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
இதையும் படிங்க : தெஆ டி20 தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் வருகை.. 2 வீரர்கள் அதிரடி நீக்கம் – புதிய திட்டம்
அவரிடம் வழக்கமாக பார்க்கும் இன்சைட் அவுட், ஸ்வீப், கவர் டிரைவ், ஆன் டிரைவ் என அவருடைய அற்புதமான ஷாட் வெளியில் வர ஆரம்பித்தது. இதன் காரணமாக இன்னொரு முனையில் விராட் கோலியின் மேல் ரன் அழுத்தம் சுத்தமாக இல்லை. 50 ரன்னில் இருந்து விரைவாக 77 பந்தில் சதம் அடித்தார். மேலும் 83 பந்தில் 105 ரன்கள் குவித்தார். இன்று விராட் கோலியை வைத்துக்கொண்டு அவர் அதிரடியாக விளையாடி அணியை எடுத்துச் சென்றதை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டுகிறார்கள்.






