இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்து மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் பாராட்டி பேசி இருக்கிறார்.
நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி தனி ஒரு வீரராக இந்திய அணிக்கு எல்லா போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே ஆன டி20 தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை படைத்தார்.
வருண் சக்கரவர்த்தி டாப் ஸ்பின் வீசக்கூடியவராக இருக்கிறார். இப்படி வீசும் பொழுது பந்தில் அதிக பவுன்ஸ் கிடைக்கும். எனவே குறிப்பிட்ட இடத்தில் விழும் பந்து பவுன்ஸ் ஆகும் அளவைவிட கூடுதல் அளவு ஆகும். இது பேட்ஸ்மேன்கள் தங்கள் விரும்பிய சாட்டை விளையாடுவதற்கு கஷ்டத்தை உருவாக்கும். இதைவிட முக்கியமாக அவருடைய பந்துவீச்சு துல்லியம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதுவெல்லாம் அவரை கடினமான பந்துவீச்சாளராக மாற்றுகிறது.
இது குறித்து ஜாகிர் கான் பேசும் பொழுது “வருண் சக்கரவர்த்தி ஒரு ஆல் பேஸ் பந்துவீச்சாளர். அவரை ஆட்டத்தின் எல்லா பகுதியிலும் பந்து வீச வைக்க முடியும். அவரை நீங்கள் பவர் பிளேவில் பந்து வீச வைத்தாலும் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசியதை நீங்கள் பார்த்தீர்கள். மேலும் அவர் மிடில் ஓவர்களில் மிகவும் அபாயகரமானவராக இருந்ததையும் பார்த்தீர்கள். இந்திய பந்துவீச்சு கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் பொழுது அவர் மிகவும் சிறப்பானவராக பங்களிப்பு செய்கிறார்”
“தற்போது வருண் சக்கரவர்த்தி மேலும் சிறப்பானவராக மாறி வருகிறார். அவர் ஸ்டெம்புகளை தாக்கும் துல்லியம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவருடைய பந்து நன்றாக சில நேரங்களில் சறுக்கியும் வருகிறது. மேலும் நல்ல வேரியேஷன்கள் வைத்திருக்கிறார். பந்தை வெளியிலும் நன்றாக திருப்புகிறார்”
இதையும் படிங்க : இங்கிலாந்து ODI தொடர் அட்டவணை.. 15 பேர் கொண்ட இந்திய அணி.. எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விவரம்
“பந்துகள் எல்லாம் நல்ல இடத்தில் விழுகின்றன. கிடைக்கும் விக்கெட்டுகள் நல்ல நம்பிக்கையை அதிகரிக்கின்றன. இப்போது அவர் எல்லாவற்றையும் தொடர்ந்து இதே பாதையில் வைத்திருப்பது மற்றும் அவர் செய்து வரும் வேலையை தொடர்ந்து செய்வதை பற்றியதும்தான். அவர் இந்த வடிவ கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு குறைந்தது மூன்று விக்கெட் வீழ்த்தி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.