இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகிர் கான். இவரது பந்துவீச்சில் இந்திய அணி பல போட்டிகளை வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியில் இருந்து விலகி ஓய்வெடுத்து வரும் ஜாகிர் கான் சமீபத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை. இந்த நிலையில் புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்கல் குறித்தும், ஐபிஎல் விதி குறித்தும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக கௌதம் கம்பீர் தலைமையில் ஆன புதிய பயிற்சியாளர் குழு பயிற்சியாளர் பதவிகளை ஏற்று வருகிறது. கௌதம் கம்பீr தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில் அபிஷேக் நாயர் மற்றும் டெஸ்கோதெ துணை பயிற்சியாளர்களாக விளங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜாகிர் கான் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இனி வருகிற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜாகிர்கான் மோர்கல் குறித்த தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “மோர்னே மோர்கல் பிரான்சிஸ் லீக் தொடரில் நான் அதிக நேரம் செலவிட்ட வீரர்களில் ஒருவர். அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் வேலை செய்ய மிகவும் நல்ல மனிதர். இந்திய அணியில் பல நல்ல வீரர்கள் இருப்பதால் மோர்கல் முன்னிலையில் அவரை பயன்படுத்தி வீரர்கள் பயனடைவார்கள். மேலும் ஐபிஎல் தொடரில் தக்கவைப்பு விதி அவசியமா? என்பது குறித்து கேட்கிறீர்கள்.
ஆம், இந்த விதி என்னை பொருத்தவரை அவசியம்தான். ஏனென்றால் ஒவ்வொரு அணியிலும் தொடர்ச்சி என்பது மிக முக்கியம். அது சரியான சமநிலையை கொண்டிருக்க வேண்டும். உலகில் நடைபெறும் வேறு லீக் தொடர்களோடு ஒப்பிடும்போது ஐபிஎல் மிகவும் இளமையான லீக் தொடராகும். எனவே ஒரு அணி எந்த வகையான மைல்கல்லை அடைகிறது என்பதை அடையாளம் காண வேண்டும். எனவே தக்கவைப்பு விதி என்பது அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:நான் பிளைட் புடிக்க போனப்ப.. பாக் அணி சர்ப்ரைஸ் பண்ணுச்சு.. இந்த பிட்ச்ல எந்த டீமும் சரண் அடையாது – அஸ்வின் பேட்டி
ஜாகிர்கான் ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்காக விளையாடியுள்ள ஒரு மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார். மேலும் அவர் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக அடுத்த ஆண்டு ஆலோசகராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும்.