இன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டார். அவரை இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு நட்சத்திரம் ஜாகீர் கான் பாராட்டி பேசி இருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக முதல் நாள் 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. இந்திய பவுலிங் யூனிட்டில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் பும்ராவை தாண்டி 10 ஓவர்கள் தந்து வீசினார். இதில் 34 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணிக்கு இப்போதைக்கு ஆட்டத்தில் முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
மற்றவர்களின் வேலையை எளிதாக்குகிறார்
ஆகாஷ் தீப் பந்துவீச்சு குறித்து பேசி இருக்கும் ஜாகீர் கான் கூறும் பொழுது “ஆகாஷ் தீப் செயல்படுவது மிகவும் நல்ல விஷயம். உங்களுடைய மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இந்த அளவில் செயல்பட்டார் அது உங்களுடைய முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாசிட்டிவாக அமையும். உங்களுக்கு ஒரு நல்ல பவுலிங் யூனிட்கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்படும் ஆகாஷ் தீப்பை இந்த கண்ணோட்டத்தில் பாராட்ட வேண்டும்”
“பொதுவாக ஒரு வேகப்பந்துவீச்சாளராக நீங்கள் தையலை அதிகம் பயன்படுத்தி பந்து வீசினால், உங்களுக்கு புதிய பந்து கிடைக்காவிட்டால் கூட உங்களால் சிறப்பான முறையில் பந்து வீச முடியும். ஆகாஷ் வீட்டின் பலமே தையலை நன்றாக பயன்படுத்தி பந்து வீசுவதுதான். மற்ற பந்துவீச்சாளர்கள் இடமிருந்து அவரை வேறுபடுத்தி காட்டுவது இதுவாகத்தான் இருக்கிறது”
அவர் அந்தப் பக்கத்தில் பந்து வீச விரும்புகிறார்
“ஆகாஷ் தீப் பந்துவீச்சு கோணத்தை விரும்புகிறார். இதன் காரணமாக ரவுண்ட் த ஸ்டெம்பில் வந்து பந்து வீசுகிறார். அவர் இந்தப்புறம் இருந்து இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் பொழுது, அவர்கள் பந்து உள்ளே வரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் பந்தின் தையலை பயன்படுத்தி வீசுவதால் பந்தின் கோணம் மாறுகிறது. இதனால் இன்று அவருடைய பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் கேட்ச் எடுத்தது போலான விஷயங்கள் நடக்கிறது”
இதையும் படிங்க : பொய்யா அழுதவங்களுக்கு.. அஸ்வின் நீங்க தந்த வித்தியாசமான பதிலடி செம்ம – கவாஸ்கர் பேட்டி
“இரண்டாவது முறையாக ஸ்லிப் கார்டனில் ஜெய்ஸ்வால் சிறப்பான ஒரு கேட்ச் பிடித்தார். நிச்சயமாக ஜெய்ஸ்வால் பந்துவீச்சாளர்களை விளையாட உற்சாகப்படுத்துகிறார். ஏனென்றால் நீங்கள் இப்படியான கேட்ச் எல்லாம் எடுக்கும் பொழுது அது பந்துவீச்சாளர்களுக்கு மிகச் சிறப்பானதாக அமைகிறது. ஆகாஷ் தீப் பந்தின் தையலை பயன்படுத்தி பந்து வீச வசதியாக அமைகிறது” என்று கூறியிருக்கிறார்.