14 ரன் 5 விக்கெட்.. புறக்கணித்த பிசிசிஐ.. இங்கிலாந்தில் மாஸ் காட்டிய சாகல்.. அறிமுக போட்டியில் அசத்தல்

0
4740
Chahal

தற்போது இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் 50 ஓவர் வடிவத்தில் ஒன் டே கப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நார்த்தாம்டன்ஷைர் பணிக்காக அறிமுகமாகிய இந்திய சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாகல் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அந்த அணியை வெல்ல வைத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற கென்ட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி வேகப்பந்து வீச்சில் முதல் நான்கு விக்கெட்டுகளை வேகமாக இழந்துவிட்டது. இதற்கு அடுத்து யுஸ்வேந்திர சாகல் வந்து பீச்சுக்கு கொண்டுவரப்பட்டா.

- Advertisement -

அவருடைய பந்துவீச்சை இங்கிலாந்து கவுன்டி பேட்ஸ்மேன்களால் கணித்து விளையாட முடியவில்லை. மேற்கொண்டு இருந்த ஆறு விக்கட்டுகளில் ஐந்து விக்கெட்டுகளை கொத்தாக யுஸ்வேந்திர சாகல் கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக கென்ட் அணி 35.1 ஓவரில் வெறும் 82 ரன்கள் அவுட் ஆனது.

யுஸ்வேந்திர சாகல் ஒரு கட்டத்தில் 8 ஓவர்கள் பந்து வீசி இருந்த பொழுது அதில் 5 மெய்டன்கள் செய்து, வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டு தந்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். பிறகு பத்து ஓவர்களை அவர் முழுமை செய்த பொழுது 5 மெய்டன்கள் உடன் 14 ரன்கள் தந்து 5 விக்கெட் கைப்பற்றி அறிமுகப் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தாம்டன்ஷைர் 14 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக இந்திய வீரர் யுஸ்வேந்திர சாகல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதை அணிக்காக இந்திய வீரர் பிருதிவி ஷா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. 15 ரூபாய்க்கு டிக்கெட்.. இத்தோடு பாகிஸ்தான் இன்னொரு ட்விஸ்ட்.. எக்ஸ்ட்ரா ஆச்சரியம்

டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த யுஸ்வேந்திர சாகலுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதற்கு அடுத்து ஜிம்பாப்வே மற்றும் இலங்கை சுற்றுப்பயணத்தில் அணியில் சேர்க்கவே இல்லை. மேலும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள துலீப் ட்ராபிக்கான நான்கு அணிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை. பிசிசிஐ மொத்தமாக கைவிட்ட நிலையில் இங்கிலாந்து சென்று தான் யார்? என்று யுஸ்வேந்திர சாகல் நிருபித்திருக்கிறார்.