பங்களாதேஷ் டெஸ்ட்.. 15 ரூபாய்க்கு டிக்கெட்.. இத்தோடு பாகிஸ்தான் இன்னொரு ட்விஸ்ட்.. எக்ஸ்ட்ரா ஆச்சரியம்

0
804
Pakistan

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் வித்தியாசமான ஆச்சரியங்களை பாகிஸ்தான்கிரிக்கெட் வாரியம் உருவாக்கி இருக்கிறது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்தில் துவங்குகிறது. இதில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக குறைந்தபட்ச டிக்கெட் விலை நாள் ஒன்றுக்கு 15 ரூபாய் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும் அதிகபட்ச டிக்கெட் விலை 83 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் போது ப்ளே ஆப் சுற்றுகளுக்கு கூட மைதானங்கள் காலியாக இருந்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள் என்று அஞ்சிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடிமட்டத்திற்கு டிக்கெட் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கராச்சி நேஷனல் மைதானத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக, இந்த மைதானத்தை மேம்படுத்தும் கட்டுமான வேலைகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கையில் “கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள எங்களது ரசிகர்களின் பங்களிப்பை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்கள்வீரர்களுக்கு ரசிகர்களே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குகிறார்கள். ஆனாலும் எங்களுடைய ரசிகர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க: கங்குலிக்கு இடமில்லை.. இடது கை வீரர்களின் ஆல் டைம் ODI லெவன்.. வாசிம் ஜாபர் தேர்வு.. 2 இந்திய பிளேயர்கள் இடம்பிடிப்பு

நாங்கள் எல்லா வகையான விருப்பங்களையும் ஆராய்ந்து பார்த்த பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதே சரியானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். மேலும் இரண்டாவது போட்டிக்கு எந்த கணக்குகளில் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டதோ, அதே கணக்குகளுக்கு பணம் மீண்டும் திரும்ப கொடுக்கப்பட்டு விடும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.