தோனியால எங்களுக்கு குழப்பம்தான் வருது.. இதே மாதிரி இருந்தா என்ன பண்றதுன்னு தெரியாது – அஸ்வின் பேட்டி

0
5396

மகேந்திர சிங் தோனி தற்போது 43 வயதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தோனி குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எம்எஸ் தோனி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின்

மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு கடைசி ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இளம் வீரர் ருத்ராஜ் பொறுப்பேற்று அணியை வழி நடத்தி வரும் நிலையில் ஒரு வீரராக தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதிலும் கடந்த ஆண்டு தோனி களமிறங்கும் ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்களின் அன்பு மற்றும் அரவணைப்பு பெரிய அளவில் இருந்தது. தோனி களமிறங்கினாலே மைதானம் அதிரும் அளவுக்கு அதிக சத்தமும் உற்சாகமும் ரசிகர்களிடையே காணப்பட்டன. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் அது தொடர்ந்ததால் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

நாங்கள் ஆட்டத்தை அப்போது மறந்து விட்டோம்

இது குறித்து அஸ்வின் கூறும் போது “எம் எஸ் தோனி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்த போது அதிக சத்தமும் கரகோஷமும் இருந்ததால் நாங்கள் ஆட்டத்தின் சூழ்நிலையை மறந்து விட்டோம். தோனி அனைவரின் அன்பை பெற்ற ஒரு வீரர். அவர் களம் இறங்கிய போது சிஎஸ்கே டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து அவர் பெறும் ஆதரவை பார்த்தேன். நான் அதை இதுவரை வெளியில் இருந்து தான் பார்த்து வந்துள்ளேன்.

இதையும் படிங்க:கோலிக்கு பந்து வீச புடிக்காது.. அவரும் சச்சினும் அந்த வேலையை ஒரே மாதிரி செய்வாங்க – பாக் வாசிம் அக்ரம்

நான் அப்போது பதட்டமாக இருந்தேன். ஏனென்றால் அடுத்து களம் இறங்கக்கூடிய வீரர் நான் தான். எனவே உள்ளே கேப்டன் ருத்ராஜிடம் சென்று ஆடுகளம் பேட்டிங் செய்ய எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ஏனென்றால் நாங்கள் வெற்றி பெறுவதற்கு இன்னும் 4 ரன்கள் தான் தேவைப்பட்டது. ஆனால் அப்போது ஒரு போட்டி வரவேற்கிறது என்பதே அவர்கள் மறந்து விட்டார்கள்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.

- Advertisement -