நிலக்கரி சுரங்கத்தில் வைரமா?.. சச்சின் மகனா இருந்தாலும் இதுதான் நிலைமை – யுவராஜ் சிங் தந்தை பேட்டி

0
134
Arjun

இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் தந்தை பரபரப்பான கருத்துக்களை கூறுவதில் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார். கபில்தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்த அவர் தற்பொழுது சச்சின் மகன் அர்ஜுன் பற்றி முக்கிய கருத்தை கூறியிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மேம்படுத்துவதற்காக யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்கிடம் பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகராஜ் சிங்கிடம் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் தன் குறித்து தானே பேசி இருக்கிறார்.

- Advertisement -

யுவராஜ் சிங் பயிற்சியாளர்

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளக்கூடிய பயிற்சியாளர் என்று கூறப்படுகிறார். அவர் பயிற்சி விஷயத்தில் எந்தவித சமரசத்தையும் செய்து கொள்ள விரும்ப மாட்டார் என்றும், பயிற்சியில் யாராக இருந்தாலும் அவர் கூறுவதை கேட்காவிட்டால் உடனடியாக அதற்கான விளைவுகள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

யுவராஜ் சிங்கை கிரிக்கெட் வீரராக உருவாக்குவதற்கு ஆரம்ப காலகட்டத்தில் அவர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார் என்று யுவராஜ் சிங்கே கூறியிருக்கிறார். தன் மகனாக இருந்தாலும் கூட பயிற்சியில் மிகவும் கரடு முரடாகவே யோக்ராஜ் சிங் இருந்திருக்கிறார். தற்பொழுது வரை அப்படியே இருக்கிறார்.

- Advertisement -

நிலக்கரி சுரங்கத்தில் வைரம்

இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி பேசி இருக்கும் யோக்ராஜ் சிங் “நீங்கள் நிலக்கரி சுரங்கத்தில் வைரத்தை பார்த்திருக்கிறீர்களா? இது சுரங்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு பாறை. சரியான கைகளில் கொடுக்கும் பொழுது தான் அது கோகினூர் வைரமாக மாறுகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் நிலைமையும் அப்படியானதுதான். அதே சமயத்தில் நீங்கள் சரியாக வடிவமைக்க தெரியாதவரிடம் கொடுத்தால் அது வீணடிக்கப்படும்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் சென்னை டெஸ்ட்.. டிக்கெட் விற்பனை விலை விபரங்கள்.. எந்த சேனலில் பார்க்கலாம்? – முழு தகவல்கள்

நான் என்னைப் பற்றி பெருமையாக கூறுவதாக நினைத்து கொள்ள கூடாது, என்னுடைய மகன் யுவராஜ் சிங் என்னுடைய கைகளில் மந்திரம் இருப்பதாக கூறுவார். நான் அவரை அப்படித்தான் உருவாக்கினேன். ஆரம்ப கட்டத்தில் நான் அவரை தயார் செய்யும் பொழுது என்னை பலரும் மிக கடுமையாக விமர்சனம் செய்தார்கள். நான் வெறுக்கப்படும் ஒரு தந்தையாக இருந்தேன். எங்கள் உறவினர்கள் வட்டத்தில் என்னை மோசமாக பார்த்தார்கள். ஆனால் இறுதியில் நான் என் மகனை உருவாக்கினேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -