பங்களாதேஷ் சென்னை டெஸ்ட்.. டிக்கெட் விற்பனை விலை விபரங்கள்.. எந்த சேனலில் பார்க்கலாம்? – முழு தகவல்கள்

0
709
BCCI

இந்த மாதம் பங்களாதேஷ அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடுகிறது. தற்போது இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கும் தேதி மற்றும் டிக்கெட் விலை குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

டிக்கெட் விற்பனை மற்றும் விலை விபரம்

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது துவங்குகிறது? மற்றும் டிக்கெட் விலை என்ன? என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை செப்டம்பர் 9ஆம் தேதி காலை ஒன்பது நாற்பத்தி ஐந்து முதல் துவங்குகிறது. குறைந்தபட்ச விலை 1000 ரூபாயில் ஆரம்பித்து அதிகபட்ச விலையாக 15,000 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

- Advertisement -

சி, டி & இ கீழ் அடுக்கு – ரூ. 1,000
ஐ, ஜே, கே கீழ் அடுக்கு – ரூ. 2,000
ஐ, ஜே, கே மேல் அடுக்கு – ரூ. 1,250
கேஎம்கே டெரஸ் – ரூ. 5,000
சி, டி, இ (ஏ/சி) ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸ் – ரூ. 10,000
ஜே (ஏ/சி) ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸ் – ரூ. 15,000

எந்த சேனலில் பார்க்கலாம்?

தற்பொழுது இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் அனைத்தையுமே ஒளிபரப்பும் உரிமத்தை ஜியோ நிறுவனம் வாங்கியிருக்கிறது. எனவே இந்தத் தொடரை முழுமையாக அந்த நிறுவனமே ஒளிபரப்ப இருக்கிறது.

இதையும் படிங்க : அஸ்வின் எங்கள பார்த்து எதுக்கு ஆச்சரியப்படறிங்க?.. அது தேவையில்லாதது – பாக் அகமத் சேஷாத் பேச்சு

மேற்கொண்டு இந்த தொடரை ஆன்லைனிலும் அந்த நிறுவனமே ஒளிபரப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி நேரத்தில் தொலைக்காட்சி சம்பந்தமாக ஏதாவது மாற்று அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -