விராட் கோலியை பார்முக்கு கொண்டுவர.. பாகிஸ்தான் அணி பற்றி இந்த விஷயத்தை சொல்லுங்க – சோயப் அக்தர் கருத்து

0
119
Akthar

இந்திய அணியின் விராட் கோலியை பார்முக்கு கொண்டுவர பாகிஸ்தான் அணி குறித்து ஒரு விஷயத்தை கூறினால் போதும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரண்டு நாடுகளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தொடங்க இருக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் மோதுகின்றன. எனவே இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு வழக்கம் போல் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

- Advertisement -

பாகிஸ்தான் அணியும் விராட் கோலியும்

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்த பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதற்கு அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அரசியல் ரீதியான காரணங்களால் இரு நாடுகளும் இரு நாடுகளுக்கு இடையே ஆன தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐசிசி போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் விராட் கோலி மிகச்சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இறுதியாக 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை பாகிஸ்தானுக்கு எதிராக அவருடைய செயல்பாடு வழக்கம்போல் சிறப்பாக அமைந்தது.

- Advertisement -

விராட் கோலியை எழுப்ப இதைச் சொல்லுங்கள்

இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறும் பொழுது “நீங்கள் விராட் கோலியை எழுப்ப விரும்பினால் அவரிடம் பாகிஸ்தானுக்கு எதிராக உங்களுக்கு ஒரு போட்டி இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் போதும், அவர் மீண்டும் பழைய முறையில் திரும்பி வந்து விடுவார். அவர் மெல்போனில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய அந்த இன்னிங்ஸை பாருங்கள். அதே வகையில் பாபர் அசாமும் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தென் ஆப்ரிக்க அணி அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் வருகை.. புதிய திட்டங்கள்

“இந்த முறை துரதிஷ்டவசமாக சையும் அயூப் காயம் அடைந்தார். பகார் ஜமான் உடன் இணைந்து அவர் தொடக்க ஜோடியாக விளையாடுவதை பார்க்க நான் ஆவலாக இருந்தேன். அவர்கள் இருவரும் ஒரு அழிவுகரமான தொடக்க ஜோடியாக இருந்திருப்பார்கள். மேலும் இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே சிறந்த அணிகள். ஆனால் இந்த முறை பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். மேலும் இந்திய அணியில் பும்ரா இருக்கிறார் அவர் தனி ஒரு வீரராக ஆட்டத்தை மாற்றி விடுவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -