இந்திய டி20 அணியின் இளம் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் சிக்ஸர் அடிக்கும் திறன் மற்றும் அவரது குரு சிவராஜ் சிங் கூறிய அறிவுரை பற்றி, அவருடைய தந்தை ராஜ்குமார் ஷர்மா பேட்டி அளித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடி மிகவும் பிரபலமாக அறியப்பட்ட வீரேந்தர் சேவாக்குக்கு பிறகு, அவருடைய இடத்தை நிரப்ப கூடியவராக அபிஷேக் ஷர்மா பார்க்கப்படுகிறார். மேலும் அவர் விளையாடும் விதம் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அபிஷேக் ஷர்மா தந்தை ராஜ்குமார் ஷர்மா பேசும்பொழுது “அபிஷேக் ஷர்மா சிக்ஸர்கள் அடிக்கும் திறன் கடவுள் கொடுத்த வரம். அவருக்கு அபாரமான கண்பார்வை திறன் இருக்கிறது. மேலும் மற்ற வீரர்களை விட லைன் மற்றும் லென்த்தை முன்கூட்டியே கணித்து விடுவார். இதன் காரணமாக அவருடைய டைமிங் அற்புதமாக இருக்கும். பேட்டில் பந்து படும் நேரம் மிகவும் சரியாக இருப்பதால், பந்து எல்லைக்கோடு தாண்டி பறக்கிறது. அவருடைய டைமிங் அவருக்கு இயல்பாக கிடைத்த ஒன்று”
“கில் உடன் அமைந்தது வெறும் பார்ட்னர்ஷிப் கிடையாது. அது சகோதரத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அவர்கள் 10 வயது முதல் பள்ளி காலத்தில் இருந்து ஒன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு ஒருமுறை ஒருவர் நன்றாக தெரியும். அவர்கள் நன்றாக டியூன் ஆனவர்கள். இப்படிப்பட்டவர்கள் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பது மிகவும் சிறந்த ஒரு விஷயம்”
“அபிஷேக்கின் விளையாட்டை மேம்படுத்துவதில் யுவி பாஜி மிகவும் பங்களிப்பு செய்திருக்கிறார். யுவராஜ் சிங் அவருடைய குரு. அவர் எப்பொழுதும் தனது அனுபவத்தை எனது மகனுடன் பகிர்ந்து வந்திருக்கிறார். அவர் சொந்தமாக இரண்டு உலகக் கோப்பைகளை இந்திய அணிக்கு வென்றவர். அப்படிப்பட்ட ஒருவர் எந்த வீரருக்காவது பயிற்சி அளித்தால் அவர் சிறந்த வீரராக வருவது இயல்பானது”
இதையும் படிங்க : ஐபிஎல்ல வேலை வேணும்.. அதுக்காக அம்பயர்கள் இந்தியாவுக்கு சாதகமா ஏமாத்துறாங்க – ஷாகித் அப்ரிடி பேச்சு
“யுவராஜ் சிங் குருவாக அபிஷேக் ஷர்மாவுக்கு கூறுகின்ற மந்திரம் ‘விளையாட்டில் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாடு’ என்பதுதான். அபிஷேக் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என யுவராஜ் சிங் விரும்பினார். என் மகனுடைய பேட்டிங் அவருடைய சுயத்திற்காக இல்லாமல் இந்திய அணியில் வெற்றிக்காக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.