இந்தியாவின் ஐபிஎல் தொடரில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இதே விவாதத்தில் பங்கு பெற்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில் தற்போது இரு நாடுகளும் கிரிக்கெட் தொடரில் நேரடியாக விளையாடி வருவது மேலும் பதட்டங்களை அதிகரித்து இருக்கிறது.
பகார் ஜமான் அவுட் சர்ச்சை
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சுற்று போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாட ஆரம்பித்து இருந்த நிலையில் அவரது விக்கெட்டை இழந்திருந்தார்.
மேலும் அந்தப் பந்தை சஞ்சு சாம்சன் தரைக்கு மிக நெருக்கத்தில் பிடித்திருந்தார். மூன்றாவது நடுவர் பலகட்ட ஆய்வுக்குப் பிறகு அதை அவுட் என்று அறிவித்தார். ஆனால் பாகிஸ்தான் தரப்பில் பந்து தரையில் பட்டது என பலரும் கருத்து கூறி வருகிறார்கள். மேலும் தானும் அப்படி நினைத்ததாக சல்மான் அலி ஆகா கூறியிருக்கிறார்.
ஷாகித் அப்ரிடி குற்றச்சாட்டு
இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி மிகக் கடுமையான குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது வைத்திருக்கிறார். அவர் நடுவர்கள் ஐபிஎல் தொடரில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக இப்படியான மோசடி தீர்ப்புகளை இந்தியாவுக்கு சாதகமாக வழங்குகிறார்கள் என்று நேரடியாக கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : தேவை இல்லாம பண்ணா சும்மா விடமாட்டோம்.. உங்க செயல் உங்க இடம் வளர்ப்ப காட்டுது – இர்பான் பதான் விமர்சனம்
இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் பேசும்பொழுது “பகார் ஜமான் எங்களுடைய அணியின் முக்கிய வீரர். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சில நல்ல பவுண்டரிகளை அடித்து அப்போதுதான் ஆரம்பித்து இருந்தார். அந்த நேரத்தில் தவறான தீர்ப்பை வழங்கி விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.






