பும்ராவுக்கு அப்ப 16 வயசு.. நான் கேன்சரில் இருந்து திரும்ப வந்த சமயம்.. அப்பவே என்னை மிரட்டினார் – யுவராஜ் சிங் பேட்டி

0
50
Yuvraj

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தான் வலைப்பயிற்சியில் முதன்முதலாக பந்துவீச்சை எதிர்கொண்டது குறித்து பேசி இருக்கிறார்.

தற்போது 15 வயதான வைபவ் சூரியவன்சி உம்ரா பந்துவீச்சில் அனாயசமாக இரண்டு சிக்ஸர்கள் அடித்தது பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பும்ராவின் இளம் வயதில் தான் எப்படி தடுமாறினேன் என யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நிறுத்து என்று சொன்னேன்

இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும்போது “நான் புற்று நோயுடன் போராடி திரும்பி வந்திருந்த சமயம் இந்திய அணிக்குள் நுழைவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது பும்ராவுக்கு வயது 16. அவர் வலை பயிற்சியில் மிகவும் அதிவேகமாக பந்துவீசிக் கொண்டிருந்தார். இந்தப் பையன் வலைப்பயிற்சியை விட்டு வெளியேற வேண்டும், எனக்கு பந்து வீசுவதை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன்”

” நான் புற்றுநோய் உடன் போராடி திரும்ப வந்து என் இயல்பான ஆட்டத்தை விளையாட முயற்சி செய்து கொண்டிருந்த நேரம் அது. இந்தப் பையனும் அந்த நேரத்தில் எனக்கு அவ்வளவு வேகமாக பந்து வீசினான். அதனால் நீ யாராக இருந்தாலும் சரி எனக்கு பந்து வீசாதே என்று சொன்னேன்”

- Advertisement -

அவர்தான் நினைவுப்படுத்தினார்

“பும்ரா இன்னொரு நாளில் இந்த கதையை வந்து என்னிடம் கூறினார். நான் அவரை பந்து வீசக்கூடாது என்று தடுத்ததை சொன்னார். அதற்கு நான் ஆமாம் நீங்கள் மிகவும் வேகமாக வீசிக் கொண்டிருந்தீர்கள் என்று சொன்னேன்”

இதையும் படிங்க : வெறும் 4 நாள்ல ஷமி ஒரு புது வேரியேஷன் கத்துக்கிட்டார்.. அத வச்சு தான் அபிஷேக்கை தூக்கினார் – பவுலிங் கோச் பேச்சு

“அப்போது அவர் கொஞ்சம் அதிக தூரம் ஓடி வந்து பந்து வீசினார். ஆனால் பந்து மிகவும் வேகமாக வந்தது. அப்போது நான் அவரிடம் இவ்வளவு திறமை இருக்கும் என்று நினைக்கவில்லை. அவரிடம் அப்போதே பேட்ஸ்மேனை ஏமாற்றும் ஒரு ஸ்விங் இருந்தத. அவர் தொடர்ந்து விலா எலும்புகளில் பந்தை வைத்து குத்துகிறார். அது உங்களுக்கு நிச்சயம் பிடிக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -