வெறும் 4 நாள்ல ஷமி ஒரு புது வேரியேஷன் கத்துக்கிட்டார்.. அத வச்சு தான் அபிஷேக்கை தூக்கினார் – பவுலிங் கோச் பேச்சு

0
41
Shami

நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது ஷமி வெறும் 4 நாட்களில் ஒரு புது பவுலிங் வேரியேஷனை கற்றுக்கொண்டு அபிஷேக் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தியதாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் க்ரோவ் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு முகமது ஷமி டிரேடிங் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக அந்த அணிக்கு செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இரண்டு பயிற்சியாளர்கள்

தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளர்களாக வெளிநாட்டைச் சேர்ந்த க்ரோவ் மற்றும் பரத் அருண் இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். இதில் பரத் அருண் உடன் இணைந்து முகமது ஷமி ஒரு புதிய வெரியேஷனை கொண்டு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் தொடர்ந்து முகமது ஷமி தேர்வு குழுவால் புறக்கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அவர் ஒவ்வொரு தொடர்களிலும் சிறப்பாக விளையாடுகிறார்.

- Advertisement -

நான்கு நாட்களில் கற்றுக் கொண்டார்

இதுகுறித்து க்ரோவ் பேசும்போது “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு நான்கு நாட்கள் முன்பாக பரத் அருள் உடன் இணைந்து முகமது ஷமி ஒரு வேரியேஷனை பயிற்சி செய்து கற்றுக் கொண்டார். அதை வைத்து தான் போட்டியில் அபிஷேக் ஷர்மா விக்கெட்டை கைப்பற்றினார்”

இதையும் படிங்க : டெல்லி டீம்ல இருந்து குஜராத்துக்கு ஆடுறார் மில்லர்.. ஹீரோவாக பார்த்தா இந்த அவமானம் வரும் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

“இங்கு நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வயது தடை இல்லை. வெறும் நான்கு நாட்களில் ஒன்றை கற்றுக்கொண்டு போட்டியில் வீழ்த்துவது பரத்தின் பயிற்சிக்கு மட்டும் இல்லை ஷமியின் மனநிலைக்கும் நல்ல சான்றாக அமைந்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -