ஃபார்ம் வரும் போகும்.. ஆனா விராட் கோலியின் இந்த விஷயத்தை கவனிச்சா அவரோட தரம் தெரியும் – யுவராஜ் சிங்

0
313

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதன் இரண்டாவது ஆட்டம் நாளை இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விராட் கோலி குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்ததால், அந்தத் தோல்வியை சரி கட்ட இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

இந்த சூழ்நிலையில் அதற்கு பிறகு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் விராட் கோலி மூன்றாவது போட்டியில் அரை சதம் அடித்தாலும் இன்னும் பெரிய அளவில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரரான யுவராஜ் சிங் விராட் கோலி குறித்த சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

கிங் கோலி என்று அழைப்பேன்

இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும்போது “நான் விராட் கோலியை கிங் கோலி என்று அழைக்கிறேன். ஏனென்றால் அவரது தரம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். அவர் பல ஆண்டுகளாக ஒரு மகா வீரராக திகழ்கிறார். அவரது பேட்டிங் பார்மை பொறுத்தவரை 15 முதல் 18 வருடங்கள் ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். ஆனால் நீங்கள் அவரது கிரிக்கெட் வரைபடம் குறித்த தகவலை பார்க்க வேண்டும். அவர் எங்கள் தலைமுறையின் சிறந்த வீரராக இருக்கிறார். அனைத்து வடிவங்களிலும் எந்த ஒரு ஒப்பீடும் இல்லாமல் மிகச் சிறப்பான வீரராக விராட் கோலி இருக்கிறார்” என்று யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:பில்டப் நல்லாதான் இருக்கு.. ஆனா ஆள் எங்கபா?. சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டி குறித்து இங்கி முன்னாள் கேப்டன் கிண்டல்

நாளை வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது போட்டி நடைபெற உள்ள நிலையில் இதில் விராட் கோலி மீண்டும் தனது பழைய பேட்டிங் பார்முக்கு திரும்புவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நடைபெற உள்ளதால், விராட் கோலி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -