கோலி சப்போர்ட் செஞ்சாரு.. ஆனா தோனிதான் எனக்கு உண்மையை காட்டினார் – யுவராஜ் சிங் பேட்டி

0
2114

இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த யுவராஜ் சிங், இரண்டு முறை இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அதில் முக்கிய வீரராக பங்காற்றினார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங் விராட் கோலி மற்றும் தோனி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்

2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார். அதுமட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்பு சிறிய காலம் ஓய்வெடுத்து திரும்பவும் இந்திய அணிக்குள் வந்தாலும் அவரால் பழைய மாதிரி விளையாட முடியவில்லை. 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டார். அதற்குப் பின்னர் சர்வதேச அரங்கிற்குள் நுழையவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அது குறித்து மனம் திறந்து பேசி இருந்த யுவராஜ் சிங் விராட் கோலி மற்றும் தோனி தனக்கு ஆதரவளித்ததாக சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

தோனிதான் எனக்கு தெளிவாக காட்டினார்

இது குறித்து அவர் விரிவாக பேசும் போது “நான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய போது விராட் கோலி என்னை ஆதரித்தார். அவர் என்னை ஆதரிக்கவில்லை என்றால் நான் இந்திய அணிக்குள் இருந்திருக்க மாட்டேன். நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் உண்மை நிலை என்ன என்பதை தோனி எனக்கு தெளிவாக காட்டினார்.

இதையும் படிங்க:ஸ்மித்கிட்ட கேமரா இருக்கு.. நான் இதை செய்யலன்னு அஸ்வின் சொன்னப்போ.. பிரமிச்சு போனேன் – முகமது கைப் பேட்டி

தேர்வாளர்கள் உங்கள் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதை தோனி எனக்கு நன்றாக எடுத்துரைத்தார். அவரால் தனக்கு முடிந்ததை செய்தார். ஒரு கேப்டனாக எல்லோரையும் நியாயப்படுத்த முடியாது. அது கங்குலி மற்றும் பாண்டிங் என யாராக இருந்தாலும் சரி. ஆதரிப்பதும் ஆதரிக்காமல் இருப்பதும் அவர் அவரது தனிப்பட்ட விருப்பம். தோனி தன்னால் முடிந்ததை எனக்கு செய்தார்” என்று யுவராஜ் சிங் கூறியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -