ஐபிஎல் 2025

என் பையன் யுவராஜ், இந்திய கிரிக்கெட்டுக்காக இதை செய்வேன்னு வாக்கு கொடுத்துருக்கார் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

இந்திய அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங், சமீப காலமாக பேட்டிகளில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவரது மகனும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருமான யுவராஜ் சிங் உடன் பேசிய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யுவராஜ் சிங் தந்தை

இந்திய கிரிக்கெட் அணிக்கு இடது கை அதிரடி வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். மேலும் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் இவர் அடித்த 6 சிக்ஸர்கள் உலகப் புகழ் பெற்றவையாக இன்னும் அது பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணிக்கு அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்து வருபவர் அபிஷேக் ஷர்மா. இவர் யுவராஜ் சிங்கின் பயிற்சியின் கீழ் வளர்ந்த வீரராக இருப்பதால் இவரும் இடது கை ஆட்டக்காரராக அபாரமான தொடக்கத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார். மேலும் பந்துவீச்சிலும் அவ்வப்போது தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மா கடந்த ஐபிஎல் தொடரில் முக்கிய கவனிக்கத்தக்க வீரராக மாறினார். இந்த சூழ்நிலையில் யுவராஜ் சிங் தந்தை, இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு யுவராஜை கொடுத்திருக்கிறாய் என யுவராஜை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்னொரு யுவராஜை கொடுத்துள்ளாய்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அபிஷேக் சர்மா தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும்போது, நான் யுவராஜ் சிங்கிடம் மகனே உன்னை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, நீ கிரிக்கெட் சகோதரத்துவத்திற்கு இன்னொரு யுவராஜ் சிங்கை கொடுத்திருக்கிறாய் என்று கூறினேன். அவர் ‘அப்பாவை போல, மகனைப் போல’ என்று யுவராஜ் சிங் பதிலளித்தார். மேலும் யுவராஜ் சிங் என்னிடம், அப்பா நீங்கள் எனக்கு கொடுத்ததை நான் அவருக்கு கொடுத்திருக்கிறேன். அதேபோல நான் பல வீரர்களுக்கும் என்னுடைய அனுபவத்தையும், பயிற்சியையும் வழங்குவேன். அதைப் பற்றி நீ கவலைப்படாதே, என்று என்னிடம் கூறினார்” என அவர் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:நான் எதுவும் செய்யல.. அந்த மாஸ்டர் பிளான போட்டது ஸ்ரேயாஸ் ஐயர்தான் – பஞ்சாப் கோச் ரிக்கி பாண்டிங் பேச்சு

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, அதன் மூலமாக இந்திய t20 அணையிலும் தொடக்க வீரராக களம் இறங்கி கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடி 484 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த ஆண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by

Recent Posts