ரோகித் செஞ்ச இதை எத்தனை கேப்டன் செஞ்சிருக்காங்க?.. இதுக்காகவே அவர விமர்சிக்காதிங்க – யுவராஜ் சிங் கோரிக்கை

0
22
Yuvraj

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து எழுந்து வரும் விமர்சனங்கள் அவசியமற்றது எனவும் கம்பீருக்கு இன்னும் காலம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் வெளிநாட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடர்களை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டு வருகிறது.

- Advertisement -

கோபமடைந்த பிசிசிஐ

இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும் கோபமடைந்திருக்கிறது. இதன் காரணமாக வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அதிரடியாக கொண்டு வந்திருக்கிறது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக நடைபெறுகிறது.

தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் யுவராஜ் சிங் கூறும் பொழுது ” நான் எப்பொழுதும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் அடிப்படையில் தான் அணியின் வளர்ச்சி குறித்தான மேப்பை பார்க்கிறேன். இந்த நிலையில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் இப்போதுதான் இந்திய அணிக்கு வந்திருக்கிறார். எனவே அவருக்கு நாம் இன்னும் கொஞ்சம் காலம் கொடுக்க வேண்டும்”

- Advertisement -

ரோஹித் செஞ்ச இதை யாருமே செய்யல

” டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மா கேப்டனாக வென்றிருக்கிறார். மேலும் அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்திய அணியை இறுதி போட்டிக்கு கூட்டி சென்றிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரையில் ஐந்து கோப்பைகளை கேப்டனாக அவர் வென்றிருக்கிறார். மேலும் தான் சரியாக விளையாடாத பொழுது தன்னை அவரே டிராப் செய்து கொண்டிருக்கிறார். கிரிக்கெட் உலகில் எத்தனை கேப்டன்கள் இதை தானாக முன் வந்து செய்திருக்கிறார்கள்? என்று நாம் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க : பும்ரா மாதிரி ரோஹித் அவருக்கு சான்ஸ் குடுத்திருந்தா.. நித்திஷ் ரெட்டி மாதிரி வந்துருப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

” நிதீஷ் குமார் தனது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சதம் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இந்திய அணியின் ஜெய்ஷ்வால் தன்னுடைய முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் எடுத்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அந்த டெஸ்ட் தொடரில் இந்த விஷயங்கள் குறித்து அதிகம் பேச வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -