இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக யுவராஜ் சிங் தனக்கும் அபிஷேக் சர்மாவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் குறித்தும், அவரை உருவாக்கியது எப்படி? என்றும் கூறியிருக்கிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மா யாரையும் விட அதிரடியான பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு நிறைய புதிய ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். இந்த நிலையில் யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் அடித்ததை அவரால் முறியடிக்க முடியும் என கருத்துக்கள் வெளியில் வருகிறது.
இதுதான் வித்தியாசம்
இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும் பொழுது ” அபிஷேக் ஷர்மா என்னுடைய பெரிய சாதனைகள் எதையும் முறியடிக்கவில்லை. ஒரு சாதனையை முறியடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் பாகிஸ்தானுக்கு எதிராக 29 பந்தில் அரைசதம் அடித்திருந்தேன். அவர் 23 பந்தில் அடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் துவக்க ஆட்டக்காரர் நான் மிடில் ஆர்டர். நான் விளையாடும் பொழுது ஃபீல்டிங் வெளியில் இருக்கும்”
” சர்வதேச கிரிக்கெட்டில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு வழிகாட்டுவதற்கு யாரும் கிடையாது. ஆனால் எனக்கு வழிகாட்ட இந்திய அணிக்குள் நிறைய மூத்த வீரர்கள் இருந்தார்கள். அதே சமயத்தில் நமக்கு சச்சின் என்ன மாதிரியான அறிவுரைகள் சொல்கிறார் என்ன செய்ய விரும்புகிறார்? என்பது குறித்து எனக்கு புரிவதற்கு நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் புரிந்து கொண்டது என்னவென்றால் வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதைத்தான்”
கில் – அபிஷேக் ஷர்மா வேறுபாடு
“நான் கில் மற்றும் அபிஷேக் ஷர்மாவுடன் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கில் ஏற்கனவே இந்திய அணிக்கு அறிமுகமாகி இருந்தார். கில் புத்திசாலி கடின உழைப்பாளி மற்றும் சிறந்த பணி நெறிமுறை கொண்டவர். ஆனால் அபிஷேக் ஷர்மாவை இந்த இடத்திற்கு நாங்கள் அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. இதையெல்லாம் அவர் செய்தால் இந்திய அணிக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் விளையாட முடியும் என்கின்ற செயல் திட்டம் எங்களிடமிருந்தது”
இதையும் படிங்க : 4வது டி20.. கம்பீரின் பிரில்லியன்ட் பிளேயிங் லெவன்.. உலகக் கோப்பைக்கு வித்தியாசமான திட்டம் – தொடர் வெற்றி சாத்தியமா?
“நான் அபிஷேக் ஷர்மாவை ஐபிஎல் விளையாட ஊக்குவிப்பதற்காக வரவில்லை. ஐபிஎல் மற்றும் ரஞ்சி கிரிக்கெட் சிறந்தது. ஆனால் நான் அவரை இந்திய அணிக்கு விளையாட வைப்பதற்காக வந்தேன். சரியாக நான்கு ஆண்டுகள் மூன்று மாதங்களில் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்” என்று கூறி இருக்கிறார்.






