2026 நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. மேலும் இந்திய அணி நிர்வாகம் வித்தியாசமான பிளேயிங் லெவனை களம் இறக்கி பரிசோதனைக்கு முயற்சி செய்திருக்கிறது.
இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
6 முழு நேர பவுலர்கள்
இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்றாவது t20 போட்டியில் இடம் பெற்றிருந்த இஷான் கிஷானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அர்ஸ்தீப் சிங் கொண்டுவரப்பட்டிருக்கிறார். மொத்தம் அணியில் ஐந்து முழு நேர பவுலர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் மட்டும் இல்லாமல் பகுதி நேர பவுலர்களாக சிவம் துபே மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இத்துடன் பேட்டிங் வரிசையில் 7வது இடத்தில் ஹர்ஷித் ராணா இருக்கிறார். ஒரே நேரத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு யூனிட்டுக்களும் வலிமையான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
முன்னெச்சரிக்கையான சிறப்பு திட்டம்
டி20 உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிக்கு ஏதாவது ஆடுகளங்கள் வேதபந்து வீச்சுக்கு சாதகமாக காணப்பட்டால், நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் உடன களம் இறங்க இந்திய அணி நிர்வாகம் இந்த பிளேயிங் லெவனை அமைத்திருக்கிறது.
இதையும் படிங்க : ஐசிசி ரேங்க்.. தொடமுடியாத உயரத்தில் அபிஷேக் ஷர்மா.. திரும்பி வந்த சூரியகுமார்.. இந்தியர்களின் ஆதிக்கம்
இந்திய பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ரானா, ரவி பிஸ்னாய், குல்தீப், அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.






