கடந்த இரண்டு நாட்களாக மகேந்திர சிங் தோனி மற்றும் கபில்தேவ் மீது யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் வைத்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பலராலும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தன் தந்தை இப்படியெல்லாம் மோசமான முறையில் பேசிக்கொண்டு வருவதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து, 2023 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது யுவராஜ்தன் தந்தை குறித்து பேசி இருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனி கண்ணாடியில் முகத்தை பார்க்க வேண்டும்
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் மகேந்திர சிங் தோனி தன்னுடைய மகன் யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கை முடிய நான்கைந்து ஆண்டுகள் இருக்கும் பொழுதே, வாய்ப்புகள் எதையும் தராமல் முன்கூட்டியே முடித்து விட்டார் எனவும், அவர் இந்தியாவின் சிறந்த கேப்டனாக இருந்தாலும் கூட அவரை தான் மன்னிக்க மாட்டேன் எனவும், அவர் செய்த விஷயங்கள் தற்போது தனக்கு தெரிய வருவதாகவும் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
மேலும் 1981 ஆம் ஆண்டு இந்திய அணியில் தன்னை எந்தவித காரணமும் இல்லாமல் கபில் தேவ் நீக்கிவிட்டதாகவும், இதற்கு தன் மகன் யுவராஜ் சிங்கை சிறப்பான வீரனாக வளர்த்து, கபில்தேவ் ஒரு உலகக் கோப்பை மட்டுமே வைத்திருக்க தன்மகன் யுவராஜ் சிங் 13 கோப்பைகளை வைத்திருக்கும் அளவுக்கு உருவாக்கி பழி வாங்கி விட்டதாகவும் கூறியிருந்தார்.
யுவராஜ் சிங் 2023 விளக்கம்
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் இரண்டு வீரர்களின் மீது இன்னொரு நட்சத்திர வீரரின் தந்தை இப்படியான மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது சமூகவலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து யுவராஜ் சிங் 2023 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சமித் டிராவிட் முன்பே.. இந்திய U19 அணியில் ஆடியுள்ள 3 இந்திய வீரர்களின் மகன்கள்.. தமிழக பிளேயருக்கும் இடம்
யுவராஜ் சிங் குறிப்பிட்ட அந்த பேட்டியில் கூறும்பொழுது ” நான் என் தந்தைக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக உணர்கிறேன். அதன் காரணமாகவே அப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். ஆனாலும் இது குறித்து அவர் பேச முன்வருவதில்லை. இதை ஏற்றுக் கொள்வதும் இல்லை. ஆனால் இதை அவர் உணர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.