சமீபத்தில் யுவராஜ் சிங் கலந்து கொண்ட ஒரு தனியார் நிகழ்ச்சி வாழ்நாள் முழுவதும் உடன் இணைந்து பேட்டிங் செய்ய விரும்பும் வீரர் யார் என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு யுவராஜ் சிங் ஒரு வீரரை தேர்வு செய்திருக்கிறார்.
யுவராஜ் சிங்கைப் பொறுத்தவரையில் தன் மனதிற்கு சரியான பட்ட விஷயங்களை வெளி உலகத்திற்காக மறைக்காமல் பேசக்கூடியவராக இருந்து வந்திருக்கிறார். தன் தந்தை பற்றிய விஷயமாக இருந்தாலும் கூட அதைப்பற்றி மறைக்காமல் பேசக்கூடியவர்.
தினேஷ் கார்த்திக் தேர்வு
யுவராஜ் சிங்கிடம் வைக்கப்பட்ட இதே கேள்வியை சில நாட்களுக்கு முன்பாக தினேஷ் கார்த்திக்கிடம் வைக்கப்பட்டது. அப்போது தினேஷ் கார்த்திக் தன் வாழ்நாள் முழுவதும் உடன் இணைந்து பேட்டிங் செய்ய விரும்பும் வீரராக விராட் கோலியை தேர்வு செய்திருந்தார்.
அதே சமயத்தில் அவருக்கு கிரிக்கெட்டில் ஆரம்பம் முதல் நல்ல நண்பராக இருந்து வரும் ரோகித் சர்மாவை தேர்வு செய்யவில்லை. மேலும் அவர் இந்திய அணிக்கு அறிமுகமான பொழுது மிகப்பெரிய நட்சத்திர வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் தேர்வு
தற்போது வாழ்நாள் முழுவதும் உடன் இணைந்து பேட்டிங் செய்ய விரும்பும் வீரர் யார்? என யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது. இதற்கு யுவராஜ் சிங் தான் இணைந்து விளையாடிய சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி, மேலும் மிக முக்கியமாக மகேந்திர சிங் தோனி ஆகியோரை தேர்வு செய்யவில்லை.
யுவராஜ் சிங் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வாழ்நாள் முழுவதும் இணைந்து பேட்டிங் செய்ய விரும்பும் வீரராக தேர்ந்தெடுத்திருக்கிறார். மேலும் ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் அவருடன் எதிரணியில் விளையாடினால் கூட வீரர்கள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.
இதையும் படிங்க : ரோகித் டீம் பாகிஸ்தான் கிடையாது.. பங்களாதேஷ் ஒன்னும் செய்ய முடியாது.. காரணம் இதான் – தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
மேலும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாத பொழுது யுவராஜ் சிங் தனக்கு நம்பிக்கை அளித்து பேசியதாக ரோகித் சர்மா கூறியிருப்பார். அப்பொழுது விளையாடும் காலம் முதலும் இப்பொழுது வரையிலும் யுவராஜ் சிங் மற்றும் ரோகித் சர்மா இடையே நல்ல நட்பு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.