நம்ம கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வி.. ஒரே வழி இதை மட்டும் செய்யுங்க – யுவராஜ் சிங் அறிவுரை

0
880
Yuvraj

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகி படுதோல்வி அடைந்திருக்கிறது.இந்த தோல்வி குறித்து இந்திய அணிக்கு யுவராஜ் சிங் அறிவுரை கூறியிருக்கிறார்

இந்திய அணியின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆனது கிடையாது. இப்படியான நிலையில் இந்திய அணி இந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகி வரலாற்று தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் உற்சாகம்

தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் வரலாற்று தோல்வி அடைந்து இருக்கின்ற காரணத்தினால், அடுத்து இந்திய அணியை தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் சந்திக்க இருக்கும் ஆஸ்திரேலியா அணி மிகவும் உற்சாகமாக இருக்கிறது. தன்னம்பிக்கை குறைவாக வரும் இந்திய அணியை வீழ்த்த எளிதாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார்கள்.

ஏற்கனவே இந்திய அணி முதல் இரண்டு டெஸ்டில் தோற்று தொடரை இழந்திருந்த போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் இந்திய அணியை வெல்வது தங்களுக்கு பெரிய செயலாக இருக்காது என்றும், இது தங்களுக்கு பாசிட்டிவான விஷயமாக அமைந்திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

யுவராஜ் சிங் அறிவுரை

இந்த நிலையில் இந்திய அணியின் இந்த படுதோல்விக்கு இந்திய அணியும் ஜாம்பவான் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விமர்சனம் வைப்பதற்கு பதிலாக தன்னம்பிக்கை கூறி முக்கியமான அறிவுரை ஒன்றை இந்திய அணியினருக்கு வழங்கி உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : யாருப்பா உங்களுக்கு அந்த ஐடியா கொடுத்த கோச்?.. கோலியும் இந்திய அணியும் பாவம் – இயான் சேப்பல் விமர்சனம்

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ” கிரிக்கெட் உண்மையிலேயே ஒரு தாழ்மையான விளையாட்டு அல்லவா. இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடி டி20 உலகக் கோப்பையை வென்ற அடுத்த சில மாதங்களில், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் ஆகி இருக்கிறது. இதுதான் இந்த விளையாட்டின் அழகு. ஆஸ்திரேலிய தொடரில் பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. இந்திய அணி தற்பொழுது சுய பரிசோதனை செய்து முன்னேறி செல்ல வேண்டும். இதுதான் சிறந்த வழி” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -