யாருப்பா உங்களுக்கு அந்த ஐடியா கொடுத்த கோச்?.. கோலியும் இந்திய அணியும் பாவம் – இயான் சேப்பல் விமர்சனம்

0
192
Virat

ஆஸ்திரேலியா ஜாம்பவான் முன்னாள் வீரர் இயான் சேப்பல் இந்திய அணி விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரின் திட்டங்களை மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக தோற்று ஒயிட் வாஸ் ஆகி இருக்கிறது. இதுவரையில் இந்திய அணி உள்நாட்டில் இப்படியான மோசமான தோல்வியை சந்திப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தோல்வி குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியில் இருந்து கிளம்பி இருக்கிறது.

- Advertisement -

இந்திய பயிற்சியாளர் குழுவின் திட்டம்

மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர்களை சமாளித்து விளையாடுவதற்காக ஸ்வீப் ஷாட் விளையாடுவதில் அதிக பயிற்சி செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு திட்டங்களை முறியடிக்க திட்டமிட்டது.

மேலும் இந்திய அணியினர் வழக்கமான ஸ்வீப் ஷாட் மட்டும் இல்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டையும் கொண்டு வந்தது. ஆனால் இந்த திட்டம் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு சரியான பலனை கொடுக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இப்படியான முறையில் விளையாடிய ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இந்த ஐடியாவை கொடுத்த கோச் யார்?

இது குறித்து பேசி இருக்கும் இயான் சேப்பல் கூறும்பொழுது ” இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி ஆட்டம் இழந்த விதமே இந்திய வீரர்களுக்கு தீர்க்கமான புட் வொர்க் இல்லாததற்கு முக்கிய சாட்சியாக இருக்கிறது. மேலும் அவர் சான்ட்னரின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். அவர் கிரீசில் இருந்து அந்த பந்தை முழுமையாக அடித்திருக்க முடியும்.ஆனால் அவரிடம் தீர்க்கமான சந்தேகம் இல்லாத புட் வொர்க் இல்லை”

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியில் நீக்கப்படும் 4 நட்சத்திர வீரர்கள்.. ஆஸி தொடரில் தலைவிதி – வெளியான தகவல்கள்

“ரிவர்ஸ் ஸ்வீப் டெஸ்ட் கிரிக்கெட்டில் தீர்க்கமான புட் வொர்க்கில் விளையாடப்படும் ஷாட்டை விட பாதுகாப்பானது என்று உங்களுக்கு கூறிய பயிற்சியாளர் யார்? முதல் இன்னிங்ஸில் புத்தி கூர்மையுடன் ஜெய்ஸ்வால் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடும் பொழுது வெளியேற்றப்பட்டது, அந்த ஷாட் பாதுகாப்பானது இல்லை என்பதற்கான சரியான உதாரணம். தற்பொழுது ஆஸ்திரேலியா தொடருக்கும் முன்பாக விராட் கோலி இந்திய அணி இரண்டும் அம்பலப்பட்டு நிற்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -