தப்பா நினைக்காதிங்க.. பாகிஸ்தான் சூப்பர் ஓவர்ல இந்த தப்பான முடிவை ஏன் எடுத்திங்க? – யுவராஜ் சிங் கேள்வி

0
467
Yuvraj

நேற்று 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அப்செட் நடந்தது. சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை அனுபவம் இல்லாத அமெரிக்க அணி வென்று சாதனை படைத்தது. இதில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான அணி எடுத்த முடிவு குறித்து யுவராஜ் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சிறப்பான முறையில் ஆரம்பிக்கவில்லை. அந்த அணியின் முகமது ரிஸ்வான், உஸ்மான்கான் மற்றும் மகார் ஜமாத் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் பவர் பிளேவில் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக பவர் பிளேவில் ஓவருக்கு ஆறு ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. மேலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் மிகவும் மந்தமாக இருந்தது. இதற்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் வந்த சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சதாப்கான் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 159 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில் இதே ஸ்கோரை அமெரிக்க அணியும் எடுக்க போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் அமெரிக்க அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சௌரப் நெட்ரவால்கர் வீசினார். பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இடதுகை பேட்ஸ்மேன் பகார் ஜமான் உடன் வந்த வலது கை பேட்ஸ்மேன் இப்திகார் அகமது சூப்பர் ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். 19 ரன்களை நோக்கி விளையாடும் பொழுது அவர் மூன்று பந்துகளை விளையாடி 5 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணியும் தோல்வி அடைந்தது.

இது குறித்து இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறும் பொழுது ” அமெரிக்க அணியில் ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சூப்பர் ஓவரை வீசினார். இப்படி இருக்கும் பொழுது விளையாட வந்த இடது கை பேட்ஸ்மேன் பகார் ஜமான் ஏன் முதல் பந்தை சந்தித்து விளையாடவில்லை? ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உண்டாக்கும் கோணம் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க: 43 பந்து 44 ரன்.. பாபர் உங்களால பாகிஸ்தான் டீமுக்கு என்ன நன்மை? பிரச்சனையே நீங்கதான் – இர்பான் பதான் விமர்சனம்

இந்த போட்டியில் குறிப்பிட்ட பந்துவீச்சாளரை அழுத்த மிகுந்த நேரத்தில் அமெரிக்க கேப்டன் சிறப்பாக யோசித்து பந்து வீச வைத்தார். அவரால் சரியான கோணத்தை உருவாக்க முடியும் என்று அவர் புரிந்து இருந்தார். இதற்கு அடுத்து மூன்று துறைகளிலும் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் போட்டியில் கிடைத்தால் பாகிஸ்தான் அணிக்கு எல்லாம் கடினம் ஆகிவிடும்” என்று கூறியிருக்கிறார்.