43 பந்து 44 ரன்.. பாபர் உங்களால பாகிஸ்தான் டீமுக்கு என்ன நன்மை? பிரச்சனையே நீங்கதான் – இர்பான் பதான் விமர்சனம்

0
96
Irfan

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் ஆரம்பித்த பிரச்சனைகள் தற்போது டி20 உலகக்கோப்பை வரை நிற்காமல் தொடர்ந்தது. நேற்று பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் மீது இர்பான் பதான் விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் அப்பட்டமாக வெளிப்பட்டன. இதன்பிறகு அவர்கள் இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவரே கேப்டன் பொறுப்பை விட்டு விலகினார். ஷாகின் அப்ரிடி வெள்ளைப்பந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக கொண்டுவரப்பட்டார். ஆனால் திடீரென அவருக்கு ஒரு தொடரில் வாய்ப்பு கொடுத்து கேப்டன் பதவியை பிடுங்கி விட்டார்கள்.

இந்த நிலையில் மீண்டும் கேப்டனாக வந்த பாபர் அசாம் நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக மிக மந்தமாக விளையாடி 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மிக முக்கியமாக அடித்து விளையாட வேண்டிய நேரத்தில் சரியாக ஆட்டம் இழந்து வெளியேறினார். இவருடைய மந்தமான பேட்டிங் பாகிஸ்தான் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் இர்பான் பதான் “கேப்டனாக மிகவும் ஒழுக்கமான பேட்டிங்நிலையில் இருக்க வேண்டும். ஆனால் பாபர் அசாம் நூறு ஸ்ட்ரைக் ரேட்டில் 40 பந்துகளுக்கு மேல் விளையாடி ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். பாபர் அசாம் நீங்கள் உங்கள் அணிக்கு எந்த உதவியும் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 18.3 ஓவர்.. நமீபியாவை வென்ற ஸ்காட்லாந்து.. இங்கிலாந்தின் அடுத்த சுற்றுக்கு சிக்கல்.. புதிய திருப்பம்

இந்த நிலையில் மிஸ்பா உல் ஹக் கூறும் பொழுது “பாபர் அசாம் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மீது வெளியில் விமர்சனங்கள் இருக்கிறது. சிறந்த வீரர்கள் இதைச் சரி செய்து கொள்வார்கள். மேலும் வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு சரியான பதில் சொல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். இப்படியான விமர்சனங்கள் அவர்களுக்கு உந்துதலையே கொடுக்கிறது. அவர் அசாம் சிறந்த வீரர் அவர் இதிலிருந்து வெளியில் வருவார்” என்று கூறி இருக்கிறார்.