இந்திய அணியின் முன்னாள் சாம்பியன் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகிய ஜாம்பவான் வீரர்கள் திரும்பவும் இந்தியாவுக்காக விளையாடுவதைக் காண ரசிகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இங்கிலாந்தில் இன்று முதல் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜென்ஸ் 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் உலகில் உள்ள முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் அவர்களது நாடுகளுக்காக விளையாட உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் சார்பாக இந்திய சாம்பியன்ஸ் அணியில் யுவராஜ் சிங்,சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஹர்பஜன் சிங், இர்ஃபான் தான், யூசுப் தான் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கின்றனர். இதே போல ஆஸ்திரேலியா அணியில் பிரெட் லீ, ஷான் மார்ஸ் போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.
அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அப்ரிடி, கம்ரான் அக்மல், அப்துல் ரசாக் வகாப் ரியாஸ், சையத் அஜ்மல் போன்ற முன்னணி வீரர்களும், இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் இயான் பெல், கெவின் பீட்டர்சன், போன்ற வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியில் கெயில், எட்வார்ட்ஸ், உள்ளிட்ட வீரர்களும், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியில் காலிஸ், ஸ்டெயின் உள்ளிட்ட வீரர்களும் இடம் பெற உள்ளனர்.
மொத்தமாக இந்தத் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியானது ஜூலை மூன்றாம் தேதி முதல் 13ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் முதல் பத்து ஆட்டங்களும் மற்றும் இறுதிப் போட்டியும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் அரை இறுதிப் போட்டிகள் உட்பட பின்வரும் ஏழு ஆட்டங்களும் நார்த்தாம்டனில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மோதும் போட்டி ஜூலை ஆறாம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மோத உள்ளது. இந்த போட்டியின் வடிவத்தைப் பற்றி பார்க்கும்போது ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியாக ஜூலை மூன்றாம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஜூலை 5 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், ஜூலை 6 பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், ஜூலை 8 ஆஸ்திரேலியா மற்றும் ஜூலை 10 தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இதையும் படிங்க:பாஸ்போர்ட் மொபைல் எல்லாத்தையும் மறந்துட்டேன்.. புது இந்திய டீம்தான் ஆனா இந்த விஷயம் பழசு – ரியான் பராக் பேட்டி
இந்திய சாம்பியன்ஸ் அணி:
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, குர்கீரத் மான், ராகுல் சர்மா, நமன் ஓஜா, ராகுல் சுக்லா, ஆர்.பி.சிங், வினய் குமார், தவால் குல்கர்னி, சவுரப் திவாரி, அனுரீத் சிங், பவன் நேகி .






