இந்திய அணி ஜெயிக்கணும்னா.. பிளேயர்ஸ்க்கு இதுதான் ஒரே வழி.. இதை செஞ்சே ஆகணும் – யுவராஜ் சிங் அறிவுரை

0
205

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் மோசமாக இழந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சீனியர் வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தொடர் மோசமான தோல்விகள்

இந்தியா கிரிக்கெட் அணி சமீப காலமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக மட்டுமே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கிலும் மோசமாக இழந்தது.

இந்த நிலையில் இந்திய சீனியர் வீரர்களின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. எனவே இந்திய சீனியர் வீரர்களோடு ஜூனியர் வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி பயிற்சி பெற வேண்டும் என்ற முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அதன் முக்கியத்துவத்தை தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருப்பதால் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது இந்திய அணிக்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டியது கட்டாயம்

இது குறித்து யுவராஜ் சிங் கூறும்போது “இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொருவரும் காயம் அடையவில்லை என்றால் நேரம் கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை பயக்கும்” என்று யுவராஜ் சிங் தனது கருத்தை கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 190 ரன்கள், ரோஹித் சர்மா ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடி 31 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:752 ரன் ஆவரேஜ்.. மீண்டும் கலக்கிய கருண் நாயர்.. ருதுராஜ் பந்துவீச்சை சிதறடித்தார்.. விஜய் ஹசாரே டிராபி 2025

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறது. எனவே இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வீரரும் ஃபார்முக்கு வர வேண்டியது கட்டாயம் ஆகிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மா மும்பை அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அதேபோல விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் டெல்லி அணிக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடப் போகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதே போலவே கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரும் அவர்களது மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட போகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -