இன்று விஜய் ஹசாரே டிராபி அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக விதர்பா அணி வீரர் கருண் நாயர் மீண்டும் ஆட்டம் இழக்காமல் அபாரமாக 44 பந்தில் 88 ரன்கள் குவித்து நம்ப முடியாத ரன் ஆவரேஜை இந்த தொடரில் பெற்று அசத்தியிருக்கிறார்.
தற்போது இந்தியாவில் மிகப் பெரிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கருண் நாயர் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்த வருகிறது. தொடர்ந்து அவர் ஆட்டம் இழக்காமல் விளையாடி வரும் விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
நாட் அவுட்களும் ஐந்து சதங்களும்
இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடு இருக்கும் கருண் நாயர் இதில் ஆறு போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் இருந்திருக்கிறார். மேலும் ஐந்து சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக 752 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் மூலம் இவரது ரன் ஆவரேஜ் இந்த தொடரில் 752 என யாருமே எதிர்பாராத வகையில் மிக பிரம்மாண்டமாக அமைந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 303 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் எதிர்பார்த்த வாய்ப்புகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கொடுக்கவில்லை. இதற்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் மிகவும் தடுமாறி விளையாடி வந்தார். ஆனால் இந்த வருடம் ஒட்டுமொத்தமாக தனது திறமைக்கு ஏற்ப விளையாடி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்.
அரையிறுதியில் அசத்தல் அரைசதம்
இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ருதுராஜ் தலைமையிலான மகாராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் துருவ் சோரி 120 பந்துகளில் 114 ரன்கள், யாஷ் ரத்தோட் 111 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினார்கள். நான்காவது இடத்தில் வந்த ஜிதேஷ் சர்மா 33 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : இந்தியாவின் பேட்டிங் கோச்சா நான் வரேன்.. இங்கிலாந்து வீரர் அறிவிப்பு.. பிசிசிஐ மாற்று யோசனை
இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்து விளையாடிய கருண் நாயர் இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடிய அதிரடியாக 37 பந்தில் அரைசதம் அடித்தார். மேலும் இறுதி வரை விளையாடிய அவர் 44 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 88 ரன்களை ஆட்டம் இழக்காமல் எடுத்து அசத்தினார். இறுதியாக விதர்பா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் குவித்தது. இந்தத் தொடரில் கருண் நாயரின் அதிரடி பேட்டிங் முக்கியமான அரையிறுதியிலும் தொடர்ந்திருக்கிறது.