மூளையை பயன்படுத்து.. இல்லன்னா அது நடக்கவே நடக்காது.. யுவராஜ் சிங் அபிஷேக் ஷர்மாவை விமர்சனம்

0
6418
Yuvraj

இந்திய டி20 அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் மென்டர் யுவராஜ் சிங் கடுமையான முறையில் அவருக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக வந்து இளம் இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா முதல் பந்தில் இருந்து தாக்கி விளையாடி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி 400 க்கும் மேற்பட்ட ரன்கள் குறித்த. இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயமாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் இருந்தது. எனவே இந்திய டி20 அணியில் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சீனியர் ருதுராஜை தாண்டி வாய்ப்பு

தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சீனியர் ருதுராஜை தாண்டி ஜூனியர் ஆன அபிஷேக் சர்மாவுக்குவாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் நேற்றைய போட்டியில் 7 பந்துகள் மட்டும் சந்தித்து 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 16 ரன்கள் எடுத்து அவசரப்பட்டு ரன் அவுட் ஆனார்.

மேலும் அவர் இடதுகை சுழல் பந்து வீச்சும் செய்யக்கூடியவர் என்பதால் ருதுராஜை விட அவருக்கு மூன்றாவது துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நாளை இந்திய டி20 அணியில் துவக்க ஆட்டக்காரர்களுக்கு பேக்கப் வீரர் தேர்வு செய்யப்பட்டால் கில் ஜெய்ஸ்வாலுக்கு அடுத்து இந்திய அணியின் அபிஷேக் சர்மாவும் வாய்ப்பு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூளையை பயன்படுத்தினால் மட்டுமே நடக்கும்

இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் தன்னுடைய சமூக வலைதளத்தில் அபிஷேக் சர்மா “ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ரன்னும் அணிக்கானது” என்று சில புகைப்படங்களை பகிர்ந்து குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அந்த பதிவில் “சீக்கிரத்தில் ஒரு பெரிய ஸ்கோர் வரப்போகிறது என அபிஷேக் ஷர்மா மீது நம்பிக்கை வைத்து கூறியிருந்தார்.

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் பாகிஸ்தான் முல்தான் பிட்ச்.. பவுலர்களுக்கு சமாதி.. பீட்டர்சன் வாகன் கடுமையான விமர்சனம்

ரசிகரின் இந்த கருத்துக்கு கீழே வந்து பதில் அளித்த யுவராஜ் சிங் “மூளையை பயன்படுத்தி விளையாடுவதாக இருந்தால் மட்டுமே பெரிய ஸ்கோர் வரும்” என நேற்று அபிஷேக் ஷர்மா அவசரப்பட்டு ரன் அவுட் ஆனதை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். தற்போது அபிஷேக் சர்மாவின் பதிவுக்கு வந்து யுவராஜ் சிங் விமர்சனம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

- Advertisement -