பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை பந்துவீச்சாளர்களின் கல்லறை என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் மைக்கேல் வாகன் இருவரும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்
இந்த தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஓரளவுக்கு பந்துவீச்சுக்கு சாதகம் கொண்ட ஆடுகளம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் பங்களாதேஷ் அணியிடம் உள்நாட்டில் தோற்று அதிர்ச்சிகரமாக தொடரையும் இழந்தது.
முடிவை மாற்றிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம்
உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அது உன் டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வி அடைந்த காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு சொந்த நாட்டு மக்களாலும் முன்னாள் வீரர்களாலும் உள்ளாக்கப்பட்டார்கள்.
இதன் காரணமாக அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான ஆடுகளங்களை அமைப்பது என முடிவு செய்து அதன்படியே முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளத்தை அமைத்திருக்கிறார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் 101, கேப்டன் ஷான் மசூத் 151 என இரண்டு சதங்கள் முதல் நாளில் அடித்திருக்கிறார்கள்.
முல்தான் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கான கல்லறை
இந்த முல்தான் முதல் டெஸ்ட் போட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் குறித்து டிவிட் செய்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ” இந்த முல்தான் ஆடுகளம் பந்துவீச்சாளர்களின் கல்லறை” என்று கடுமையாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : கம்பீருக்கு கிரெடிட் தரது மோசமானது.. ரோகித்தான் அதுக்கு தகுதியானவர் – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
மேலும் 2025 ஆம் ஆண்டு ஆசஸ் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் “முதல் டெஸ்ட் போட்டியின் முல்தான் ஆடுகளம் சாலை போல் இருக்கிறது. இதில் டாஸ் வெல்வது மிகவும் நல்லது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






