உலகெங்கிலும் எத்தனையோ கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றாலும், இந்திய ‘பிரிமியர் லீக்’ தான் உலக கிரிக்கெட்டின் கோலாகலத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது . 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஐபிஎல்’ கொண்டாட்டத்திற்கு அணிகள் தற்பொழுது தயாராக துவங்கி விட்டன.
நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ‘மினி ஏலம்’ டிசம்பர் 23ஆம் தேதி ‘கொச்சி’யில் நடைபெற இருக்கிறது . இந்த ஏலத்திற்கு முன்பாக எல்லா அணிகளும் தங்கள் அணியில் இருந்து முக்கியமான உலக வீரர்களை விடுவித்துள்ளதால் ,யார் யார் எந்தெந்த அணிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது .
உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களான ‘ஆரோன் பின்ச்’ ,’நிக்கோலஸ் பூரான்’,’ஜேசன் ஹோல்டர்’,’டுவெயின் பிராவோ ‘, ‘வான் டர் டஸ்ஸன்’, ‘ஜிம்மி நிஷாம்’,’முகம்மது நபி’ ,’கேன் வில்லியம்சன்’ ‘அஜிங்க்ய ரஹானே’ ஆகியோர் தங்கள் அணி நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர் .
‘சன்ரைசர்ஸ்’ ஹைதராபாத் அணிக்காக 8 ஆண்டுகளாக ஆடி அந்த அணியின் கேப்டனாகவும் இருந்த ‘கேன் வில்லியம்சனு’ம் ஹைதராபாத் அணி நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார் . இதனைப் பற்றிய அவரிடம் கேட்டபோது ” ஹைதராபாத் அணிக்காக நீண்டகாலம் ஆடியது மகிழ்ச்சியான ஒரு அனுபவம்” என்று கூறினார்.
அது பற்றி தொடர்ந்து பேசி அவர் “ஹைதராபாத் அணி உடனான பயணத்தில் 2016 ஆம் ஆண்டு ‘சாம்பியன் பட்டம்’ வென்றது மறக்க முடியாதது” என்று கூறினார் , நடக்கவிருக்கும் ‘மினி ஏலம்’ பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” ஏலத்தை பொறுத்தவரையில் அந்தந்த அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும்,அவர்களுக்கு என்ன தேவை என்று. அதனால் நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்,ஒரு நல்ல அணி என்னை தேர்ந்தெடுக்கும் என்று நம்புகிறேன் , வீரர்களின் ஏலம் என்பது அப்படித்தான் நடக்கும் நம் கைகளில் எதுவும் இல்லை”
என்று தெரிவித்தார் .
மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” நான் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதையே விரும்புகிறேன், ஒரு கிரிக்கெட் வடிவத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் வடிவத்திற்கு நம்மை மாற்றிக் கொள்ளும் போது ஏற்படக்கூடிய சவால்கள் ஒரு கிரிக்கெட் வீரராக என்னை பக்குவப்படுத்துவதற்கு நிறைய உதவுகிறது , அதில் இருக்கக்கூடிய சவால்கள் தான் ஒரு விளையாட்டு வீரராக என்னை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது “, என்று கூறினார் .
“என்னுடைய டி20 கிரிக்கெட்டின் பார்ம் இன்னும் நான் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை , நான் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் என்னுடைய இலக்கை உயர்த்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ” என்று பதிலளித்தார்.
‘சன்ரைசர்ஸ்’ ஹைதராபாத் அணிக்காக இதுவரை 76 போட்டிகளில் ஆடி உள்ள கேன் வில்லியம்சன் 2101 ரன்களை சேர்த்துள்ளார். அவரது சராசரி 36,