பும்ரா பவுலிங் வீடியோவ பாத்துட்டேன்.. சமாளிக்க இந்த பிளான் ரெடியா இருக்கு – ஆஸி இளம் அறிமுக வீரர் பேட்டி

0
85
Bumrah

தற்போது இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு 13 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நாதன் மெக்ஸ்வீனி பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று அந்த அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த மாதம் முதல் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

முடிவை மாற்றிக் கொண்ட கேப்டன் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தன்னுடைய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் கேமரூன் கிரீன் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பினார். எனவே இவர்கள் இருவரும் விளையாட வேண்டும் என்றால் துவக்க இடத்திற்கு புதிய வீரரை கொண்டுவர முடியாததால், ஸ்மித்தை துவக்க வீரராக அனுப்பினார்கள்.

ஸ்மித் துவக்க இடத்தில் சரியாக விளையாடாததால், தற்போது கேமரூன் கிரீன் காயமடைந்து வெளியே இருப்பதால், கேப்டன் கம்மின்ஸ் தனது முடிவை மாற்றிக் கொண்டு தொடக்க இடத்திற்கு புதிய வீரரை கொண்டு வர சமாதித்திருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி முதல் முறையாக அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வீடியோ பார்த்து விசுலைசன் செய்து வருகிறேன்

இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி ” நான் பெர்த் மைதானம் வந்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பொழுது நிச்சயம் பும்ரா பந்துவீச்சு குறித்து மிகவும் ஆழமாக இருக்கப் போகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு நானே உதவிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. நான் பும்ரா பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு அவருடைய வீடியோக்களை பார்த்து என்ன செய்ய முடியும் என கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்”

“அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர். அவரை எதிர்கொள்வதற்காக நான் நிச்சயம் காத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு மாதத்திலோ அல்லது சில மாதங்களாகவோ நான் சிறந்த நிலையில் பேட்டிங் செய்வதாக நினைக்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் சிறந்தவன் என்றும் உணர்கிறேன்”

இதையும் படிங்க : நாளை 3வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய 2 மாற்றங்கள்.. பேட்டிங் நீளத்தை மாற்ற யோசனை

“எனது ஆட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம். நான் ஒரு துவக்க ஆட்டக்காரராக இருப்பதால் பந்தை சிறந்த முறையில் விட்டு விடுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் பந்துவீச்சாளர்களை பந்து வீச வைக்க வேண்டும்” என்று தனது திட்டத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -