இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நாளை செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம் என்று பார்க்கலாம்.
தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்பொழுது சமநிலையில் இருக்கிறது. எந்த அணி தொடரை வெல்ல வேண்டும் என்றாலும் மீதம் இருக்கும் இரண்டு போட்டியையும் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சுரியன் மைதானத்தின் வரலாறு
தற்போது இந்திய அணி மூன்று பிரதான சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடி வருகிறது. ஆனால் நாளை போட்டி நடைபெறும் செஞ்சுரியன் மைதானத்தில் சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் பெரிய அளவுக்கு இருந்தது கிடையாது. அங்கு பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்கள்தான் அதிகம் இடம் பெற்று விளையாடுகிறார்கள்.
இதன் காரணமாக இந்திய அணியும் ஒரு சுழல் பந்துவீச்சாளரை குறைத்துக் கொள்ள வேண்டிய இடத்துக்கு வந்திருக்கிறது. அதே சமயத்தில் தற்போது மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணியின் பேட்டி யூனிட் நீளம் 7 வரை மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்தால் ஆறாவது விக்கெட்டை இழந்ததும் அர்ஸ்தீப் சிங் விளையாட வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இரண்டு முக்கிய மாற்றங்கள்
இதன் காரணத்தால் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் நீக்கப்பட்டு, அவருடைய இடத்திற்கு மிதவேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரமன்தீப் சிங் அறிமுகமாவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இவர் ஆல் ரவுண்டர் என்பதால் பேட்டிங் நீளம் 8 வரையில் மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் புதிய பந்தில் ஆவேஸ் கான் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. மேலும் கடைசி போட்டியில் இறுதிக்கட்ட ஓவரிலும் ரன்களை விட்டுக் கொடுத்தார். எனவே யாஸ் தயாலை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. நாளைய போட்டியில் இந்த இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
இதையும் படிங்க : ரோஹித் கோலிக்கு இந்த முட்டாள்தனம் செய்யாதீங்க.. ஏன்னா ஃபார்ம் அவுட் ஆகும் போதுதான் இது நடக்குது – மைக்கேல் ஹசி கருத்து
இந்திய பிளேயிங் லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரமன்தீப் சிங், அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் யாஸ் தயால்.






