கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

சுயமரியாதை இல்லையே.. இவ்ளோ பேசிட்டு பணத்துக்காக இந்தியா வந்து இருக்கீங்க.. பாகிஸ்தான் ரமீஸ் ராஜாவை சாடிய கனேரியா.!

13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் லீக் போட்டிகள் துவங்க இருக்கின்றன. இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெறுவதை தொடர்ந்து கடந்த காலங்களில் சில சர்ச்சைகள் எழுந்தன. 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் செல்வதை திட்டவட்டமாக மறுத்து வந்தது. இதன் காரணமாக ஆசிய கோப்பை போட்டிகள் முதல் முறையாக ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்றன.

இதில் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையைப் பெற்ற பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் ஏனைய போட்டிகள் இலங்கையிலும் வைத்து நடைபெற்றது. இந்தியா,பாகிஸ்தான் சென்று ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனாக இருந்த ரமீஸ் ராஜா கடும் கண்டனம் தெரிவித்ததோடு இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் நாங்கள் உலககோப்பையை புறக்கணிப்போம் என மிரட்டல் விடுத்தார் .

இது தொடர்பாக பல சர்ச்சைகளும் அந்த காலகட்டங்களில் நிலவி வந்தன. இந்நிலையில் 2023 உலக கோப்பை போட்டிகளில் வர்ணனையாளராக பங்கேற்பதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க வீரரும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார். இது சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பல்வேறு விதமான சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரும் கிரிக்கெட் விமர்சகர் டேனிஷ் கனிரியா தன்னுடைய கண்டனங்களை தெரிவித்து இருப்பதோடு ரமீஸ் ராஜாவின் முந்தைய கருத்து குறித்து கேள்வியும் எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசி இருக்கும் அவர் ஒரு கருத்தை முன் வைக்கும் போது சொன்ன கருத்திலிருந்து பின்வாங்குவது சரியான அணுகுமுறை இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விரிவாக பேசியிருக்கும் கணிரியா” ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணி உலக கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவிற்கு செல்லக்கூடாது என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பணத்திற்காக அவர் இந்தியாவிற்கு வந்து வர்ணனை செய்து கொண்டிருக்கிறார். அவர் பல சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். இது போன்ற விஷயங்களை கூறும் போது நாம் சொன்ன வார்த்தைகளில் இருந்து பின்வாங்க கூடாது . அது ஒருவர் மீதான சுயமரியாதையை குறைக்க வைக்கும்”என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர்” அவர் பாகிஸ்தான் அணி இந்தியாவில் உலகக்கோப்பை விளையாடுவதற்காக செல்லக்கூடாது என்று விரும்பினால் அவரும் வர்ணனை செய்வதற்கான இந்த வாய்ப்பை மறுத்திருக்க வேண்டும். அவரது இந்த யூ-டர்னை நான் விரும்பவில்லை” என கூறி முடித்தார் டேனிஷ் கனிரியா. இந்த வருட துவக்கத்தில் பிசிபி சேர்மன் ஆக நியமிக்கப்பட்ட ரமீஸ் ராஜா இங்கிலாந்து அணியுடன் ஆன டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

- Advertisement -
Published by