“நீ என் பேட்டிங் பார்த்து வளரல அதான் இப்படி ஆடற” – டிராவிட் சூர்யா ஃபன்!

0
319
Sky

இந்தியா வந்துள்ள இலங்கை அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்தத் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றி உள்ளது!

தொடர் யாருக்கென்று நிர்ணயிக்கும் போட்டியாக மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் சூறாவளி பேட்டிங் மூலம் மிகப்பெரிய ரன் இலக்கத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் மொத்தம் 51 பந்துகளை சந்தித்து அதில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் என 112 ரன்களை நொறுக்கி தள்ளி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை அதிரடியாக பதிவு செய்தார். இந்திய அணி இந்த ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு சூரியகுமார் உடன் ஜாலியான உரையாடலில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டார். இதில் ராகுல் டிராவிட் அவரது முந்தைய காலங்கள் குறித்தும் சில கேள்விகள் எழுப்ப அதற்கு சூரியகுமார் பதிலளித்தார்.

முதலில் பேசிய ராகுல் டிராவிட் ” நீங்கள் என் பேட்டிங்கை பார்த்து வளரவில்லை அதனால் தான் இப்படி எல்லாம் பந்தை அடித்தது நொறுக்குகிறீர்கள்!” என்று வேடிக்கையாகக் குறிப்பிட, அதைக் கேட்டு வெடித்து சிரித்த சூரியகுமார் “உங்கள் பேட்டிங்கை பார்க்காமல் எப்படி வளர முடியும். உங்கள் பேட்டிங்கை பார்த்துதான் வளர்ந்தேன்!” என்று பதில் அளித்தார்!

- Advertisement -

மேற்கொண்டு உரையாடிய ராகுல் டிராவிட் ” உங்கள் மனைவி உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்கிறார் என்பது எனக்கு தெரியும். உங்களை ஃபிட்னஸ் விஷயத்தில் அதிகம் ஈடுபடுத்தியது அவர்தான் என்பதும் எனக்குத் தெரியும். உங்களது உணவு, நீங்கள் செய்யும் உடற்பயிற்சி இதுவெல்லாம் ஒரு பயிற்சியாளராக எனக்கு கவனிக்கத்தக்க ஒன்று. இந்தியா ஏ அணியில் உங்களைப் பார்த்ததிலிருந்து தற்போது வரை உங்களது விஷயத்தில் நிறைய மாற்றங்கள் உள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோயோ டெஸ்டின் போது எல்லையை கடக்க நீங்கள் டைவ் அடித்தது இன்னும் நினைவிருக்கிறது!” என்று பேசி இறுதியாக நகைச்சுவையாக முடித்தார்!

இதற்கு பதில் அளித்த சூரியகுமார்
” திருமணத்திற்குப் பிறகு என் மனைவி இந்த விஷயத்தில் என்னை மிகவும் கடினமாக தள்ளி விடுகிறார். பெங்களூரில் நடந்த உடற்தகுதி தேர்வு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை. நாங்கள் இருவரும் கிரிக்கெட்டை பற்றி நிறைய பேசுகிறோம். இதில் எப்படி சிறப்பாக இருக்க முடியும் என்று விவாதிக்கிறோம். அதைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியிருக்கிறார்!