“இவங்கள துரத்தி விடவும் முடியாது.. சந்தோசமா போயிடுவாங்க!” – தென் ஆப்பிரிக்க வீரர்களை தாக்கிய கவாஸ்கர்!

0
386
Gavaskar

நேற்று தென் ஆப்பிரிக்கா ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

பொதுவாக இங்கு பகலில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

- Advertisement -

இங்கு ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும் விதமாக ஆடுகளத்தில் செயல்படும். அதற்குப் பின்பு பேட்டிங் செய்வது மிகவும் எளிமையாகிவிடும்.

மேலும் போட்டியின் இரண்டாம் கட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும். எனவே இதன் காரணமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதை இந்த ஆடுகளத்தில் பகல் போட்டிகளில் அணிகள் வழக்கமாக வைத்திருக்கின்றன.

- Advertisement -

இப்படி நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு, பிற்பகுதியில் அடித்து விளையாட நினைக்காமல், தவறான முறையில் ஆட்ட அணுகுமுறையை அமைத்து 116 ரன்களில் சுருண்டு தோற்றார்கள்.

இதுகுறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “இன்றைய வீரர்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருக்கிறது. ஒன்று நாட்டுக்காக விளையாடுவது மற்றொன்று டி20 லீக்குகளில் விளையாடுவது. இவர்கள் நாட்டிற்காக விளையாடும் பொழுது ரன்கள் அடிக்க வில்லை என்றாலும், விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஏனென்றால் இவர்களுக்கு டி20 லீக்குகள் பல நாடுகளில் இருக்கிறது. ஐபிஎல் விளையாடுவார்கள் இல்லை என்றால் வேறு எங்காவது விளையாடுவார்கள்.

இது வீரர்களுக்கான பொறுப்பை குறைக்கிறது. அவர்கள் சுலபமான வழியில் செயல்பட விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் அதிரடி முறையை கையாளுகிறார்கள். அதிரடி முறை வெற்றி பெற்றால் நிறைய ஸ்கோர், இல்லையென்றால் 116 ரன்களில் ஆல் அவுட்.

இப்படி மோசமாக ஆகிவிட்டால் என்ன ஆகி விடப்போகிறது? அடுத்த இரண்டு நாட்களில் இன்னொரு போட்டி வரப்போகிறது. எங்கள் காலத்தில் இப்படியான ஆப்ஷன்கள் கிடையாது. நாங்கள் நாட்டிற்காக சரியாக விளையாடவில்லை என்றால், உடனே கிளப் போட்டிகளுக்கு போக வேண்டும். ஆனால் கிளப் போட்டிகளில் பெரிய சம்பளம் அப்பொழுது இல்லை!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -