ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியம்; கால்பந்து, கூடைப்பந்து வீரர்கள் கோடிகளில் சம்பாரிக்கும்போது, கிரிக்கெட் வீரர்கள் மட்டும் ஏன் கூடாது? – வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பை நாயகன் கிளைவ் லாய்டு கருத்து!

0
603

“கால்பந்து வீரர்கள், கூடைப்பந்து வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுது, ஏன் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிக்க கூடாது ?அவர்களுக்கு ஐபிஎல் போன்ற தொடர் மிகவும் முக்கியம்.” என்று பேசியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின ஜாம்பவான் கிளைவ் லாய்டு.

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு உலககோப்பை பைனலில் பலம்மிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக உலககோப்பையை வென்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. இன்றோடு

- Advertisement -

அது நிறைவேறி இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக அப்போது இந்திய அணியில் இடம்பெற்ற பல முன்னணி வீரர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படியும் பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

அத்துடன் அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிளைவ் லாய்டு இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு சமகாலங்களில் பல்வேறு டி20 லீக் போட்டிகள் வந்துவிட்டது. அது குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்தது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஜாம்பவான் கிளைவ் லாய்டு பேசியதாவது: “எங்களது காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பிரபலமாக இருந்தாலும், எங்களது உண்மையான மதிப்பு எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது பல்வேறு டி20 லீக் போட்டிகள் வந்துவிட்டது. வீரர்கள் அதில் சிறப்பாக செயல்பட்டு தங்களது வாழ்விற்கு தேவையான நிறைய பணம் சம்பாதிக்கின்றனர். இது ஒரு அற்புதமான வாய்ப்பு.

- Advertisement -

கண்டிப்பாக ஒவ்வொரு லீக் தொடர்களிலும் பலதரப்பட்ட வீரர்கள் பங்கேற்கும்படி, விளையாட வாய்ப்புகள் கிடைக்கும் படி வழிவகை செய்துகொடுக்க வேண்டும். ஐபிஎல் போன்ற லீக் தொடர் இதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

லீக் போட்டிகளில் விளையாடி, கிரிக்கெட் வீரர்கள் பணம் சம்பாதிப்பத்தில் எந்தவித தவறும் இல்லை. ஏனெனில் அவர்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதற்காக உரிய மதிப்பை பெறுகின்றனர். கால்பந்தில் பல முன்னணி வீரர்கள் கோடிகளில் சம்பாதிக்கின்றனர். கூடைப்பந்தில் மைக்கல் ஜோர்டனில் துவங்கி இப்போது வரை பலரும் சம்பாதிக்கும் பொழுது, இதுபோன்ற கேள்விகள் எழவில்லையே ஏன்? கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதில் மட்டும் கேள்விகள் வருகிறது. ஆனால் எந்தவித தவறும் இல்லை.

லீக் போட்டிகளில் விளையாடுவது சொந்த நாட்டிற்கு ஆபத்தாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அதாவது வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் 50 லட்சம் பேர் மட்டுமே மொத்தமாக இருக்கின்றனர். அதில் சிறந்த 20 வீரர்களை உருவாக்குகிறோம். பத்து பேர் மட்டுமே நாட்டிற்காக விளையாடுகின்றனர். மீதமுள்ள 10 வீரர்கள் வெளிநாடுகளில் உள்ள லீக் போட்டிகளில் மட்டும் விளையாடுவது சொந்த நாட்டிற்கு ஆபத்தாகிவிடும்.

ஏனெனில் அடுத்த 10 வீரர்களை உருவாக்குவதற்குள் இந்த 10 வீரர்கள் மாறிவிடுவார்கள். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தால், வீரர்கள் பற்றாக்குறையில் கிரிக்கெட் இல்லாமல் போய்விடும். அது நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி கிரிக்கெட்டில் பணம் சம்பாதிப்பது குற்றம் ஒன்றும் இல்லை உங்களது முழு திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். அதற்கு உரிய மதிப்பை பெருகிறீர்கள்!.” என்று தெளிவாக பேசினார்.