“இதுபோன்ற முடிவுகளை இனி அடுத்தடுத்து எதிர் பார்க்கலாம் – அஸ்வின் சுவாரசிய பேட்டி!

0
1857

நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பந்துவீச்சு ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது . இந்நிலையில் போட்டியின் முடிவுக்கு பின்னர் பேட்டி அளித்த அஸ்வின் தன்னுடைய இந்த பங்களிப்பு ஒரு மிகச் சிறப்பான ஒன்று என்று குறிப்பிட்டார் .

மேலும் இது தொடர்பாக பேசிய அவர் ” இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் அன்று எவ்வாறு நடக்கும் என்பதை நான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன் எனக் கூறினார் . மேலும் இந்த வெற்றிக்கு பேட்ஸ்மேன் களின் பங்களிப்பு முக்கியமானது எனக் கூறியவர் , இரண்டு நாட்களுக்கும் மேலாக ஒரு அணி களத்தடிப்பில் இருந்துவிட்டு அதன் பிறகு பேட்டிங் ஆட வருவது அவர்களை உடல் அளவிலும் மன அளவிலும் மிகவும் சோர்வுக்கு உள்ளாக்கக் கூடிய ஒரு விஷயம் என குறிப்பிட்டார் . மேலும் இந்த ஆடுகளம் வழக்கத்தை விட சற்று மெதுவாக இருந்ததாக குறிப்பிட்ட அஸ்வின் பந்து மேல் எழும்பி வரும் விதமும் சற்று குறைவாக இருந்தது எனக் கூறினார் .

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து பந்து வீசுவது எப்போதுமே ஒரு அருமையான அனுபவம் எனக் குறிப்பிட்ட அஸ்வின் அவரைப் போன்ற ஒரு பந்துவீச்சாளர்டன் இணைந்து பந்து வீசுவது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று பெருமிதத்துடன் கூறினார் . மேலும் இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது . மொத்தத்தில் அவர் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர் என ஜடேஜாவை பாராட்டினார் அஸ்வின் ..

மேலும் தொடர்ந்து பேசிய அஸ்வின் ஆஸ்திரேலியா அணி அடுத்த டெஸ்ட் போட்டிக்கு மிகச் சரியான திட்டங்களுடன் பலமாக வரும் என தானிய எதிர்பார்ப்பதாக கூறினார் . மேலும் டெஸ்ட் போட்டிகளில் உயர்தர வரிசையில் ஆடுவதை தான் மிகவும் விரும்புவதாக தெரிவித்த அவர் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய முயற்சி செய்வேன் என கூறினார் . இன்று ஆஸ்திரேலியா ஆட்டத்தின் போது அவர்களது முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்த விதம் எங்களுக்கு அடுத்த அடுத்த விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது என தெரிவித்த அவர் அடுத்த டெஸ்ட் போட்டியினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார் . முதல் இன்னிங்ஸில் 220 ரன்கள் முன்னிலை என்பது ஒரு மிகப்பெரிய இலக்கு என குறிப்பிட்ட அஸ்வின் இந்திய அணியின் பின் வரிசை ஆட்டக்காரர்களின் பேட்டிங் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியதாகக் கூறினார் .