இப்போதாவது திருந்துங்க பஞ்சாப்… காசு கொடுத்த மட்டுமே ஆடிக்கொடுக்க மாட்டாங்க! 60 லட்சத்துக்கு வாங்குன பையன் செஞ்சுரி அடிச்சு கொடுத்தான்; 18.5 கோடிக்கு எடுத்த சாம் கர்ரன் என்ன செய்தார்? – சேவாக் கடும் விமர்சனம்!

0
763

60 லட்சம் ரூபாய்க்கு எடுத்தவர் அபாரமாக விளையாடிக் கொடுத்துவிட்டார். 18.5 கோடிக்கு எடுத்தவர் என்ன செய்துவிட்டார்? என்று கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் வீரவேந்திர சேவாக்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சாம் கர்ரன் 18.5 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். ஐபிஎல் ஏலம் வரலாற்றில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்டவராக இருக்கிறார்.

- Advertisement -

சாம் கர்ரன், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை பைனலில் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்று ஐபிஎல் தொடருக்கு வந்ததால், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு அதிகமாகவே நிலவியது.

பேட்டிங்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கி ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். 11 போட்டிகளில் பேட்டிங் செய்து 216 ரன்கள் அடித்துள்ளார். மேலும் பந்துவீச்சிலும் பெரிதளவிற்கு தாக்கம் ஏற்படுத்தவில்லை. இவரது எக்கானமி கிட்டத்தட்ட 10க்கு நெருக்கமாக இருக்கிறது. ஏழு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் சாம்கரன் செயல்பாட்டை சமீபத்தில் அபாரமாக செயல்பட்டு வரும் பிறப்பு சிம்ரன் உடன் ஒப்பிட்டு கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சேவாக்.

- Advertisement -

மேலும், பிரப்சிம்ரன், நடந்து முடிந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தார். 22 வயதேயான இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 60 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே எடுத்தது.

இதே பிரப்சிம்ரன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிங்ஸ் அணிக்கு 4.8 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். அப்போது சரியாக செயல்படவில்லை என்று வெளியே அடுத்த சீசனே அனுப்பி விட்டார்கள்.

இந்த சீசனில் மீண்டும் ஒருமுறை பிரப்சிம்ரன் எடுக்கப்பட்டார். இதற்கு மிகப்பெரிய பலனை கொடுத்துவிட்டார். முதல் ஆறு போட்டிகளில் தடுமாற்றம் கண்டுவந்த பிரப்சிம்ரன் கடைசி 6 போட்டிகளில் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். 12 போட்டிகளில் 334 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் மற்றும் சதம் அடங்கும்.

பிரப்சிம்ரன் மற்றும் சாம் கர்ரன் இருவரையும் ஒப்பிட்டு பேசிய சேவாக் கூறுகையில், “பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முன்னதாக 4.8 கோடிக்கு எடுக்கப்பட்ட பிரப்சிமரன், பின்னர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் வெறும் 60 லட்சம் ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதிலிருந்தே தெரிகிறது திறமை வாய்ந்த வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் அணி தக்கவைக்க தவறி வருகிறது. மேலும் இளம் வீரர்களை தன் வசம் வைத்துக்கொண்டு எப்படி அணியை வளர்க்க வேண்டும் என்றும் திட்டமிட தவறி வருகிறது. ஒரு சீசனில் செயல்படவில்லை என்றால் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடக்கூடாது.

22 வயதான பிரப்சிமரன் தன்னால் என்ன முடியும் என்பதை சதம் அடித்து காட்டிவிட்டார். அவர் இத்துடன் நிற்கப் போவதில்லை. இவரைப் போன்ற வீரர்களிடமிருந்து பஞ்சாப் அணி பலனை பெற வேண்டும். அதற்கு பிரதிபலனாக இப்படிப்பட்ட வீரர்களை தக்கவைத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வெறுமனே ஏலத்தில் பணம் செலவழித்து பெரிய வீரர்களை பெறுவதாலோ, நிறைய பணம் கொடுத்து விட்டோம் என்று விளையாடுவார்கள் என்று எதிர்பார்ப்பதோ முறையான திட்டமிடலாக இருக்காது. 18.5 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட சாம் காரரன் என்ன செய்துவிட்டார்? என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.