இளம் வீரர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகிறார்கள்.. இப்போது அந்த சிஎஸ்கே வீரரை என்ன செய்யப் போகிறீர்கள்? – கைப் கோபம்

0
0

​வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி நிர்வாகத்தின் தொடர்ச்சியற்ற தேர்வு முறைகள் மற்றும் இளம் வீரர்களைக் கையாளுதல் குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையாகக் விமர்சித்துப் பேசிய கருத்துக்கள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

​வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், அணியின் பந்துவீச்சு தேர்வு மற்றும் திட்டமிடல் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக அறிமுக வீரர்களை உடனடியாக அடுத்த போட்டியில் நீக்கியது போன்ற முடிவுகள் இளம் வீரர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

- Advertisement -

​இதுகுறித்து முகமது கைஃப் பேசும்போது “நீங்கள் புதிய வீரர்களைக் கொண்டு வருகிறீர்கள், ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதில்லை. ஒருவருக்கு வாய்ப்பளித்தால், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள். நபியை ஏன் நீக்கினார்கள்? கம்போஜும் ரன்களை விட்டுக்கொடுத்தார். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் இளம் வீரர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கிறீர்கள். அடுத்ததாக நபி எப்போது ஒயிட் பால் போட்டிகளில் விளையாடுவார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர் விளையாடாமலேயே போகலாம். இது தவறானது” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது “உங்களிடம் போதுமான பேக்கப் வீரர்கள் இல்லை. இந்தத் திட்டமிடல் தொடர்ந்தால், அது அணிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். இளம் அனுபவமற்ற பந்துவீச்சு அமைப்பைக் கொண்ட இளம் கேப்டனாக இருப்பது தான் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. உலகக்கோப்பைக்குக் குறைந்த காலமே உள்ள நிலையில், அவர் பதற்றமடைவது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தொடரின் மூலம் நாம் கற்றுக்கொண்டவை கோலி, ரோஹித், கில் மற்றும் கே.எல். ராகுலின் சதங்கள் அல்ல. அவர்கள் அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் இதில் புதிதாக எதையும் சேர்க்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது “ஒரு தொடரில் விளையாடும்போது, நாம் மேலும் முன்னேறவும், நமது பலவீனங்களைச் சரிசெய்யவும் முயல வேண்டும். இந்தத் தொடரிலிருந்து எந்த நேர்மறையான விஷயமும் சேர்க்கப்படவில்லை. சொல்லப்போனால் இது பாதிப்பைத்தான் ஏற்படுத்தியுள்ளது, தன்னம்பிக்கை குறைந்துள்ளது. தேர்வுக் குழுவில் பல பந்துவீச்சாளர்கள் உள்ளனர், ஆனால் அவர்களால் ஷமி போன்ற அனுபவமிக்க வீரர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று விஷயங்கள் தவறாகச் செய்யப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன்” என்று கூறி முடித்து இருக்கிறார்.

- Advertisement -