“நீ சச்சின் மகன் அப்படிங்கறத மறக்கணும்!” – யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்!

0
8297
Arjun

ok bro2022-23ம் ஆண்டிற்கான ரஞ்சி சீசன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 32 அணிகள் ஆடுகின்றன . நாலு பிரிவுகளாக பிரித்து நடைபெறும் இந்த போட்டியானது இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டியாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை நெருங்கி கொண்டிருப்பதால் ரஞ்சிக்கோப்பையில் தங்களது திறமையை நிரூபித்து இந்திய அணிகளிடம் பிடிப்பதற்காக அனுபவ வீரர்களும் இளம்பிரர்களும் தங்களை முழு அளவில் தயார்படுத்தி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் . இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இவர் மும்பை அணிக்காக கடந்த ரஞ்சிப் போட்டிகளில் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இவருக்கு ஆடும் லெவனின் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை . மும்பை அணிக்காக டி20 மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் ஆடி உள்ள அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி போட்டிகளில் இதுவரை ஆடவில்லை .

தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவரை மும்பை அணியில் இருந்து விடுவித்து கோவா அணியில் சேர்த்து விட்டார் சச்சின் டெண்டுல்கர் . கடந்த 13 ஆம் தேதி துவங்கிய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் முதல் முறையாக களம் கண்டார் அர்ஜுன் டெண்டுல்கர்.

இந்த போட்டியில் பாசில் வென்ற கோவா அணி முதலில் பேட்டி தேர்வு செய்தது . கோவா 202 ரண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆட வந்த அர்ஜுன் டெண்டுல்கர் அபாரமாக ஆடி தனது தந்தையைப் போலவே ரஞ்சி கிரிக்கெட்டின் முதல் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார் .

- Advertisement -

இவரது தந்தையான சச்சின் டெண்டுல்கர் 1988 ஆம் வருடம் தனது முதல் வஞ்சிப் போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆறாவது விக்கட்டுக்கு சியாஸ் பிரபுதேசாய் உடன் ஜோடி சேர்ந்த அர்ஜுன் டெண்டுல்கர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 207 பந்துகளை சந்தித்து அர்ஜுன் டெண்டுல்கர் 120 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார் . இதில் 16 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும் .

அர்ஜுன் டெண்டுல்கரின் இந்த அபார் ஆட்டத்திற்கு அவரது பயிற்சியாளரான யோக்ராஜ் சிங் முக்கியமானவராக கருதப்படுகிறார் . இந்த ரஞ்சி சீசன் துவங்குவதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரை இந்திய அணியின் ஸ்டார் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இடம் பயிற்சிக்காக அனுப்பி இருந்தார் . அவரிடம் பயிற்சி பெற்று வந்த பிறகு தனது முதல் போட்டியிலேயே அர்ஜுன் டெண்டுல்கர் சதம் அடித்து இருப்பது யோக்ராஜ் சிங்கு பாராட்டுகளை குறித்துள்ளது .

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள யோக்ராஜ் சிங் ஒரு நாள் யுவராஜ் சிங்கிடமிருந்து எனக்கு தொலைபேசி வந்தது . என்னிடம் சச்சின் டெண்டுல்கர் அவருடைய மகனுக்கு பயிற்சி அளிக்க முடியுமா என்று கேட்பதாக யுவராஜ் என்னிடம் கேட்டுக் கொண்டார் . அந்த வாய்ப்பு என்னால் எப்படி மறுக்க முடியும் . ஏனென்றால் சச்சின் எனக்கு மூத்த மகன் போன்றவர் என்று கூறி இருந்தார் ..

மேலும் இது குறித்து பேசிய யோக்ராஜ் சிங் நான் யுவராஜ் இடம் கூறினேன் என்னுடைய பயிற்சி முறைகளைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும் அவை எவ்வளவு கடினமாக இருக்கும் என்று அதனால் எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டால் நான் கண்டிப்பாக பயிற்சி அளிப்பேன் என்று தெரிவித்தேன் . அதற்கு சச்சினும் சம்மதம் தெரிவித்தார்

அதன்பின் என்னிடம் பயிற்சிக்காக வந்த அர்ஜுன் டெண்டுல்கரிடம் நீ முதலில் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதை மறக்க வேண்டும் மேலும் உன் தந்தையின் பெயரிலிருந்து இனி வெளியே வந்தால்தான் உனக்கான கிரிக்கெட்டை நீ எந்த அழுத்தமும் இல்லாமல் ஆட முடியும் என்று தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.