“நீ கேப்டனே கிடையாது!” ரேன்ஞ்சில் ரோகித் சர்மாவை கடுமையாக தாக்கிய சுனில் கவாஸ்கர்!

0
218
Gavaskar

விராட் கோலியின் கேப்டன்சி முடிவுக்கு பிறகு ரோகித் சர்மாவை மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்தது.

ரோகித் சர்மா மூன்று வடிவ இந்திய கிரிக்கெட்டுக்கு கேப்டனாக மட்டுமல்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட் உலகக் கோப்பைகளுக்கு மட்டுமே கேப்டனாக இருப்பதற்கான வாய்ப்பில் மட்டுமே தெரிந்தார்.

- Advertisement -

அவர் மூன்று உலகக் கோப்பைகளை தாண்டி விளையாடுவதற்கான உடல் தகுதியோடு இல்லை. இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியோடு அவரது கிரிக்கெட் எதிர்காலம் என்ன என்று தெரிந்துவிடும்.

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற அவரது கேப்டன்சி மிக அருமையாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது உலகக் கோப்பை கேப்டன்சி செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இறுதியாக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அணி தேர்வு மற்றும் திட்டங்கள் மிக மோசமாக இருந்தது.

தற்பொழுது ரோகித் சர்மா கேப்டன்சி பற்றி பேசி உள்ள சுனில் கவாஸ்கர்
“நான் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தேன். கேப்டனின் செயல்பாடுகள் திட்டங்கள் சிறப்பாக இல்லை என்றால் வெளிநாடுகளில் அது குறித்து அந்தந்த வாரியங்களால் கேள்வி கேட்கப்படும். ஆனால் இந்தியாவில்தான் அது வித்தியாசமாக இருக்கிறது.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் கூட சிறந்த ஐபிஎல் பிளேயர்களை கொண்ட அணியை வைத்துக்கொண்டு, அவர் இறுதிப் போட்டிக்கு கூட வராமல் போனது மிகவும் ஏமாற்றம் அடைய வைத்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பற்றி பிசிசிஐ இவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். அஸ்வினை விட்டு இவர்கள் வந்ததற்காக மேகமூட்டமாக இருந்ததை காரணம் கூறினார்கள். ஆனால் ஹெட்டுக்கு பவுன்சர் பலவீனம் இருந்தது அதை ஏன் பயன்படுத்தவில்லை. கமென்ட்ரி பாக்சில் இருந்து ரிக்கி பாண்டிங் முதல் கொண்டு நாங்கள் இதை சொல்லிக் கொண்டே இருந்தோம். ஆனால் இவர்கள் ஹெட் என்பதன் எடுத்த பிறகு பவுன்சர் வீசினார்கள். ஏன் இவர்களுக்கு இது கூட தெரியாதா?

சிறந்த பிட்டாக இருக்கும் அணியாக சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால் முந்தைய தலைமுறை வீரர்களை விட களத்தில் சீக்கிரம் உடைந்து போகிறீர்கள். உங்களால் 20 ஓவர் போட்டிகள் விளையாடி கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்த வடிவத்தில் கூட உங்களுக்கு பணிச்சுமை இருப்பதாக சொன்னால் எப்படி?” இன்று மிகக் கடுமையான கேள்விகளை முன்வைத்து தாக்கி இருக்கிறார்!